காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2023-ம் ஆண்டு மே மாதத்தில் 19.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.
அதுசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ,12-வது மற்றும் 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
Click here for latest employment news
No comments:
Post a Comment