ECGC PO வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,02,090/- || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
ஏற்றுமதி கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது ப்ரோபேஷனரி அதிகாரி (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் மே 31 ஆம் தேதி வரை செயலில் இருக்கும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே தங்களின் பதிவுகளை 11.06.2023 க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ECGC Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Probationary Officer (PO) பதவிக்கு என 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது, Accounts (CA) – 01 பணியிடம், Legal – 04 பணியிடங்கள், Company Secretary – 01 பணியிடம், Actuary – 02 பணியிடங்கள், IT – 02 பணியிடங்கள் , IT/CISO – 01 பணியிடம், Country Underwriting/ research – 01 பணியிடம், Rajbhasha/Hindi – 04 பணியிடங்கள், Data Science – 01 பணியிடம்.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Law (LLB)/ B Tech or BE in Computer Science / Information Technology or MCA / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 01.04.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) என உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
- Probationary Officer (PO) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.53600- 2645(14)- 90630- 2865(4)- 1,02,090/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
- இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Online Examination மற்றும் Descriptive Paper (Test of English Language) & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click here for latest employment news
No comments:
Post a Comment