TNSTC தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை -10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Mechanic (Motor Vehicle), Mechanic Diesel, Fitter மற்றும் Welder (Gas And Electric) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNSTC காலிப்பணியிடங்கள்:
- Mechanic (Motor Vehicle) – 10 பணியிடங்கள்
- Mechanic Diesel – 10 பணியிடங்கள்
- Fitter – 10 பணியிடங்கள்
- Welder (Gas And Electric) – 10 பணியிடங்கள்
என மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம் :
தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TNSTC விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து ஆன்லைன் மூலம் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click here for latest employment news
No comments:
Post a Comment