ஜூலை 2 அன்று மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள அமலாக்க அதிகாரி (Enforcement Officer), கணக்கர் அலுவலர் (Accounts Officer), உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner) ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு வர இருக்கிறது.
இன்னும் ஒரு மாதத்தில் தேர்வு வரவுள்ள நிலையில் பெரும்பாலான மாணவர்கள் அதற்கு முழு வீச்சில் தயாராகி இருப்பீர்கள். ஒரு சிலர் இப்போது தான் என்ன செய்வது, என்ன படிப்பது என்று சிந்தித்துக்கொண்டு இருப்பீர்கள். உங்கள் அனைவருக்காகவும் தான் இந்த செய்தி.
இந்த தேர்வின் முதல் படிநிலை எழுத்துத் தேர்வு. Multiple Choice Questions எனப்படும் பல பதில்கள் தேர்வு அம்ச வினாக்கள்கொண்ட கொள்குறி வினாக்களைக் கொண்டதாக இருக்கும். மொத்தம் 120 கேள்விகள். ஒரு கேள்விக்கு 2.5 மதிப்பெண்கள். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.அதற்கு என்னென்ன புத்தகங்களை படிக்க வேண்டும் என்று இப்போது உங்களுக்கு பட்டியலிடுகிறோம்.
பாடம் | புத்தகத்தின் பெயர் | ஆசிரியர் | பதிப்பகம் |
ஆங்கிலம் | High School English Grammar and Composition | எஸ். சந்த் | ரென் மற்றும் மார்ட்டின் |
ஆங்கிலம் | Objective General English | எஸ்பி பக்ஷி | அரிஹந்த் |
வரலாறு-இந்திய சுதந்திரப் போராட்ட | India’s Struggle for Independence | பிபன் சந்திரா | பென்குயின் |
வரலாறு | Modern Indian History-NCERT XII | பிபன் சந்திரா | NCERT |
நடப்பு நிகழ்வுகள் | நடப்பு நிகழ்வுகள் ஆண்டு 2023 | அரிஹந்த் | |
இந்திய அரசியல் | Indian Polity | எம் லக்ஷ்மிகாந்த் | மெக்ரா ஹில் |
அரசியல் - பொருளாதாரம் | Contemporary World Politics | NCERT | |
பொது கணக்கியல் மற்றும் கோட்பாடுகள் | கணக்கியல் வகுப்பு 11 மற்றும் 12 | NCERT | |
தொழில்துறை உறவுகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் | Industrial Relations and Labour Laws | டாக்டர் நிகிதா அகர்வால் | கல்கோடியா |
பொது அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகளின் அறிவு | Encyclopedia for General Science and Handbook for Computer Science and IT | அரிஹந்த் | |
இந்தியாவில் சமூக பாதுகாப்பு | Social Security in India | ரவி பிரஜாஷ் யாதவ் | அவிஷ்கர் |
மன திறன் மற்றும் அளவு திறன் | Quantitative Aptitude | அப்ஜித் குஹா | மெக்ரா ஹில் |
இது போக தினசரி செய்தித்தாள் படித்து தனிப்பட்ட குறிப்புகள் எழுத்து வைத்திருந்தால் அதை படித்துக்கொள்ளவும். இவை இருந்தாலே தேர்வை நிச்சயம் பாஸ் பண்ணி விடலாம்.
Click here for latest employment news
No comments:
Post a Comment