உங்கள் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் ஆரோக்கியமான அளவில் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு நமது தினசரி உணவில் பொட்டாசியம் சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த 10 உணவுகளின் பட்டியல் இதோ..
வாழைப்பழம் : பொட்டாசியம் சத்து உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு நாம் முதலில் சாப்பிட வேண்டியது வாழைப்பழம். இது எளிதில் கிடைக்க கூடியது மட்டுமல்லாமல் எல்லாரும் விரும்பக்கூடிய உணவு. இதில் பொட்டாசியம் மட்டும் அல்லாமல் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. ஒரு வாழைப்பழத்தில் ஏறக்குறைய 400-450 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளன.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு : இது மிகவும் சுவையானது. இதில் அதிகமான பொட்டாசியம் சத்து உள்ளது. ஒரு சர்க்கரை வள்ளிக் கிழங்கில் தாராளமாக 500 முதல் 600 மில்லி கிராம் பொட்டாசியம் சத்து இருக்கும்.
கீரைகள் : கீரைகள் எப்போதும் நம் உடலுக்கு நிறைய பலன்களை கொடுக்க கூடியது. இதில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. அகவே இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரை கப் சமைத்த கீரையில் ஏறக்குறைய 420 முதல் 450 மில்லிகிராம் வரையில் பொட்டாசியம் உள்ளது.
அவகோடா பழம் : இதை வெண்ணெய் பழம் என்றும் கூறுவார்கள். சாப்பிடுவதற்கு க்ரீமியாகவும் சுவையாகவும் இருக்கும். இந்தப் பழத்தில் அதிகமாக பொட்டாசியம் உள்ளது. ஒரு அவகோடா பழத்தில் 700 முதல் 800 மில்லிகிராம் வரையில் பொட்டாசியம் சத்துள்ளது.
மொச்சை பயறு (வெள்ளை) : பருப்பு வகைகளில் மொச்சைப் பயிறில், அதுவும் குறிப்பாக வெள்ளை மொச்சைப் பயிறில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. அரை கப் சமைத்த மொச்சைப் பயறுகளில் 600 முதல் 700 மில்லிகிராம் பொட்டாசியம் சத்துள்ளது.
தயிர் : தயிரில் கால்சியம் மற்றும் ப்ரோபயாடிக்ஸ் மட்டுமல்லாமல் பொட்டாசியம் சத்தும் அதிகமாக உள்ளன. ஒரு கப் தயிரில் ஏறக்குறைய 500 முதல் 600 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.
சால்மன் மீன் : கொழுப்பு சத்து மிகுந்த இந்த சால்மன் மீனில் அதிகளவு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நம் உடலுக்கு தேவையான பொட்டாசியம் சத்தையும் இந்த மீன் கொண்டுள்ளது. மூன்று அவுன்ஸ் சால்மன் மீனில் 300 முதல் 400 மில்லி கிராம் பொட்டாசியம் அடங்கியுள்ளது.
காளான் : குடை காளான் போன்ற பல வகை காளான்களில் பொட்டாசியம் சத்து அதிகளவில் உல்ளது. அரை கப் சமைத்த காளானில் 300 – 400 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.
ஆரஞ்சு பழம் : சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றான ஆரஞ்சு பழம் நம் உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியை தரக் கூடியது. இதில் பொட்டாசியம் சத்தும் கொஞ்சம் உள்ளது. ஒரு ஆரஞ்சு பழத்தில் 200 முதல் 250 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.
இளநீர் : இது ஒரு இயற்கை பானம். அதிக நீர்ச்சத்து கொண்டது. இதில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. கால் லிட்டர் இளநீரில் 400 முதல் 600 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.
0 Comments:
Post a Comment