கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாளை (24ம் தேதி) தக்கலை அரசு தலைமை மருத்துவமனை,108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் நாளை (24ம் தேதி - சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு தலைமை மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மருத்துவ உதவியாளருக்கு உண்டான தகுதிகள் பின்வருமாறு,
மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் என்ன?
1. Bsc nursing, GNM , ANM,DMLT (12 ம் வகுப்பிற்குப் பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) LIFE SCIENCE -- Bsc Zoology, Botany ,Bio Chemistry, Microbiology Biotechnology , Plant Biology இதில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
2. மாத ஊதியம் ரூபாய் 15,435 (மொத்த ஊதியம்) நேர்முக தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
3. தேர்வு முறையானது எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை மற்றும்மனித வளத்துறையின் நேர்முகத் தேர்வு
4. இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
ஓட்டுநருக்கான தகுதிகள் என்ன?
1. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. மாத ஊதியம் ரூபாய் 15,235 (மொத்த ஊதியம்)
3. நேர்முகத் தேர்வு அன்று 24 வயதிற்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் .
4. 162.5 cm குறையாமல் இருக்க வேண்டும் .
5. இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
6. ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை
1. எழுத்து தேர்வு
2. தொழில்நுட்ப தேர்வு
3. மனித வளத்துறை நேர்காணல்
4. கண் பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு
5. சாலை விதிகளுக்கான தேர்வு
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7397724822, 7397724853, 7397724848 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
Click here for latest employment news
No comments:
Post a Comment