Search

படித்துக்கொண்டே ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம்..! சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட தென்காசி கலெக்டர்..!

 

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு சேர்ந்து படிக்க வாய்ப்பு என மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன்அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு B.Sc.(Computer Designing) B.Com, BCA & BBA சேர்ந்து படிக்க வழி வகை செய்யப்படும்.

Ads by 

12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு HCL Technologies-ல் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ் வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் B.Sc (Computer Designing பட்டப்படிப்பு அமிட்டி பல்கலைக்கழகத்தில் BCA/BBA/B.Com மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் Integrated Management பட்டப்படிப்பு சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்று தரப்படும்.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 12ம் வகுப்பில் 2022ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் Entrance examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

இத்திட்டத்தின் வருடாந்திர ஊதியமாக ரூ.1,70,000/ முதல் ரூ.2,20,000/ வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் வட்டாட்சியர் அலுவலகம், 2வது தளம், தென்காசி, என்ற அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் : 04633-214487 மற்றும் அலைபேசி எண் : 7448828513 மூலமாக விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment