இருசக்கர வாகனத்தில் சாலையில் பயணம் மேற்கொள்ளும் வாகன போட்டிகள் தங்களது கண்களை எவ்வாறு பாதுகாக்க கொள்ள வேண்டும் என விளக்குகிறார் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கண் மருத்துவர் வேணுகோபால்.
செங்கல்பட்டு மாவட்ட கண் மருத்துவர் வேணுகோபால் நியூஸ் 18 தமிழ்நாடு டிஜிட்டல் பக்கத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து வேணுகோபால் கூறுகையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்களில் தூசிகள் அல்லது மண் துகள்கள் விழுந்திடுச்சுனா வீட்டிற்கு வந்ததும் சுத்தமான குளிர்ச்சியான ஐஸ் வாட்டரில் முகம் கழுவ வேண்டும்.
இப்படி நீங்கள் ஐஸ் வாட்டரில் கண்களில் நீரை அடித்து கழிவினால் கண்களில் உள்ள தூசிகள் மண்கள் ஆகியவை தாமாக வெளியேறும்
இதை செய்யாமல் நீங்கள் தவறினால் தூசிகள் நிறைய சேர்ந்து கண்களின் நிறத்தையே மாற்றிவிடும் , எனவே அப்பப்ப வெளியே போய்விட்டு வீட்டிற்கு வரும்போது ஐஸ் வாட்டரில் முகம் கழுவினால் இதுபோல் கண்களில் தூசி தங்குவதை தவிர்க்கலாம் எனவும் அப்படி இல்லை என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று eye irrigation செய்து கொள்ளலாம் என மருத்துவர் வேணுகோபால் கூறுகிறார்.
0 Comments:
Post a Comment