மதுரை கோ.புதூர் பகுதியில் உணவு, ரசாயன தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கோ புதூர் தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்கம் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் கட்டணத்துடன் கூடிய உணவு தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ரசாயன பொருட்கள் தயாரிப்பு அளிக்கப்படுகிறது.
சிறுதானியம், பழங்கள், காய்கறி, தக்காளி, நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், அடை மிக்ஸ், உடனடி மசாலா மிக்ஸ் , பொடி வகைகள், ஊறுகாய், ஜூஸ் தயாரிப்பு மற்றும் லேபிள் தயாரிப்பு, சந்தை விற்பனை குறித்து ஜூன் 19 முதல் 23 வரை காலை 10:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.
கம்ப்யூட்டர் சாம்பிரணி, பாத்திரம் விளக்கும் பவுடர், வாஷிங் பவுடர், கிளினிங் பவுடர், சுத்தம் செய்யும் திரவம், ரோஸ் வாட்டர், ஓமவாட்டர், வினிகர், வலிநிவாரண மருந்து தயாரிப்பு குறித்து ஜூன் 26 முதல் 30 வரை, காலை 10:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பயிற்சி அளிக்கப்படும். திருமங்கலம் குன்னனம்பட்டி கோகிலா சித்த மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
குறைந்தது பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண் பயிற்சியில் இலவசமாக பங்கேற்கலாம். கல்விச்சான்றிதழ் நகல், போட்டோ, ஆதார் அட்டை அகல், எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினராக இருந்தால் ஜாதி சான்றிதழ் நகலுடன் பதிவு செய்ய வேண்டும்.எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப வளர்ச்சி அலுவலக விரிவாக்க மையம், தொழிற்பேட்டை 3வது நுழைவு வாயில், மாட்டுத்தாவணி, மதுரை. என்ற முகவரிக்கு கொரியர் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த எண்ணிற்கு 82200 06872, 86670 65048 தொடர்புக்கு கொண்டு அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Click here for latest employment news
No comments:
Post a Comment