தினமும் பார்க்கும் இந்த காய்கறிகள் எல்லாம் இந்திய காய்கறி இல்லை..எங்கிருந்து வந்தது தெரியுமா..? - Agri Info

Adding Green to your Life

June 16, 2023

தினமும் பார்க்கும் இந்த காய்கறிகள் எல்லாம் இந்திய காய்கறி இல்லை..எங்கிருந்து வந்தது தெரியுமா..?

 தக்காளி இல்லாத சமையலை நினைத்து கூட பார்க்க முடியாது. அப்படி நாம் சமையலறையில் படுத்தும் நிறைய காய்கறிகளை நாம் ஊர் காய்கறி  என்று நினைத்துக்கொள்வோம். நம் ஊரில் விளைவிப்பதால் அது நம் ஊர் காய்கறி ஆகிவிடாது. நாம் இன்று பயன்படுத்தும் நிறைய காய்கறிகள் வெளிநாடுகளில் இருந்து இங்கு கொண்டு  வரப்பட்டு விளைவிக்கப்பட்டது. அப்படி தினமும் நாம் சாப்பிடும் காய்கறிகள் எந்த நாட்டில் இருந்து வந்தது என்று தெரிந்துகொள்வோம்.

தக்காளி முதன்முதலில் தென் அமெரிக்காவில் தான் சாப்பிடப்பட்டதாம். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில், அது  மெதுவாக மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கு குடிபெயர்ந்தது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1493 இல் தக்காளியை ருசித்ததாகக் கருதப்பட்டது, பின்னர் அது ஸ்பெயினுக்கு எடுத்து செல்லப்பட்டு விளைவிக்கப்பட்டுள்ளது.  நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மற்ற ஐரோப்பிய நாடுகளும் பரவி, அங்கிருந்து அவற்றின் அமெரிக்க காலனிகளும் பயிரிட்டு சாப்பிடத் தொடங்கின. அதேபோல தான் இந்தியாவிற்கும் காலனியாட்சி செய்த மக்களால் வந்தது.

முட்டைக்கோஸ் வட சீனாவில் 4000 ஆண்டுகளுக்கு முன்பும், வடக்கு ஐரோப்பாவில் 3000 ஆண்டுகளுக்கு முன்பும் வளர்க்கப்பட்டதாக கதைகள் சொல்கின்றன. கிமு நான்காம் நூற்றாண்டில், முட்டைக்கோஸ் எகிப்து, கிரீஸ் மற்றும் ரோமானியப் பேரரசு முழுவதும் காணப்பட்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்களால் உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஐரோப்பாவில் இருந்து முதலில் ஏற்றுமதி செய்யப்பட்ட காய்கறிகளில் இதுவும் ஒன்றாகும். மாலுமிகள் அதிகம் விரும்பி உண்ட காய்கறியாம்.

தர்பூசணிகள் எகிப்திய ஹைரோகிளிஃபிக்ஸில் தோன்றின மற்றும் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பாரோவின் கல்லறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளன. முட்டைக்கோஸைப் போலவே, தர்பூசணிகளும் மாலுமிகளின் விருப்பமானவை. மத்தியதரைக் கடல் முழுவதும் கப்பல் மூலம் பரவியது, 10 ஆம் நூற்றாண்டில் சீனாவில் தரையிறங்கி 13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் பரவியது.  ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் வட அமெரிக்காவின் கடற்கரைக்கு வந்து பின்னர் உலகம் முழுவதும் படர்ந்தது.


அதேபோல வெண்டைக்காய் என்றதும் நம் ஊர்த்தானங்க.. நாட்டு காய்கறி என்று நினைக்கலாம் ஆனால் இது உண்மையில் மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் தான் முத்தத்தில் தோன்றியதாம். அங்கிருந்து ஆசிய பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக பரவி, எகிப்தில் இருந்து இந்தியாவிற்கு குடியேறிய பாண்டு பழங்குடியினரால் வெண்டைக்காய் இந்தியாவில் அறிமுகமானதாக கருதப்படுகிறது.

நாம் பயன்படுத்தும் மிளகாய் வகைகளும் நம்முடையது அல்ல. மெக்சிகோவில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. அதோடு பெருவில் அதிக மிளகாய் வகைகள் பயிரிடப்படுகிறது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தபோது இந்த மிளகாயை பார்த்து ஐரோப்பாவில் அப்போது பயன்படுத்தப்பட்ட ஆசிய மிளகுக்கு ஒத்த காரம் இருந்ததால் இதற்கு bell pepper  என்று பெயரிட்டார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment