பப்பாளியை விட அதன் விதைகளில் அதிக நன்மை உள்ளது என்றால் நம்ப முடிகிறதா..? மிஸ் பண்ணிடாதீங்க.! - Agri Info

Education News, Employment News in tamil

June 16, 2023

பப்பாளியை விட அதன் விதைகளில் அதிக நன்மை உள்ளது என்றால் நம்ப முடிகிறதா..? மிஸ் பண்ணிடாதீங்க.!

 ஆரோக்கியமான உடல் ஆரோக்கியம் வேண்டுமெனில் அதற்கு அடிப்படையாக நாம் கவனித்துக்கொள்ள வேண்டியது செரிமான அமைப்பைதான். அது சீராக இருந்தாலே நம் ஆரோக்கியத்தை பற்றி கவலையே பட வேண்டாம். எனவே செரிமானத்தை மேம்படுத்த நாம் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களுமே போதுமானது. அந்த வகையில் செரிமானத்தை மேம்படுத்துவதில் பப்பாளி பழத்தை காட்டிலும் அதன் விதைகள் சிறந்த ஆற்றல் மிக்கவை என்று சொன்னால் நம்ப முடிகிறதா..?

ஆம்.. பப்பாளியைப் போலவே அதன் விதைகளும் மிகவும் நன்மை பயக்கும். இந்த விதைகள் மோசமான செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகின்றன. அதோடு நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அவற்றில் உள்ளன. ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நார்ச்சத்து நிறைந்த பப்பாளி விதைகளில் காணப்படுகின்றன. ஊட்டச்சத்து நிறைந்த பப்பாளி விதைகள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஹெல்த்லைன் செய்தியின்படி, பப்பாளி விதைகளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. மேலும் பல நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

ஊட்டச்சத்து நிறைந்தது - பப்பாளியைப் போலவே, பப்பாளி விதைகளும் மிகவும் நன்மை பயக்கும். ஊட்டச்சத்து நிறைந்த பப்பாளி விதைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இந்த விதைகளில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் உள்ளன, அவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். பப்பாளி விதைகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

நோய்த்தொற்று தடுப்பு - பப்பாளி விதைகளில் உடலில் ஏற்படும் தொற்றுகளுக்கு எதிராக போராடும் கூறுகள் உள்ளன . சிறப்பு வகை பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்க பப்பாளி விதைகள் உதவிகரமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செரிமானத்தை மேம்படுத்துகிறது - பப்பாளி விதையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. பப்பாளி விதைகளை தொடர்ந்து உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தும்.

சிறுநீரக செயல்பாட்டைப் பாதுகாத்தல் - நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிறுநீரகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள அதிகப்படியான திரவம் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. பப்பாளி விதைகளை சாப்பிடுவது சிறுநீரக செயல்பாடு மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவை.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் - பப்பாளி விதையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. சில ஆய்வுகளில் பப்பாளி விதையில் புற்றுநோயை தடுக்கும் பண்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. பப்பாளி விதைகளை உட்கொள்வது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். ஒரு ஆய்வில் பப்பாளி விதைகள் வீக்கம் மற்றும் புற்றுநோய் வளர்ச்சியிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment