திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக முதல்வர் பணியிடங்களுக்கு வரும் ஜுன் 14ம் தேதி காலை 11:00 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நாகம்பட்டி, திசையன்விளை, சங்கரன்கோவில், பணகுடி ஆகிய இடங்களில் இயங்கி வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக முதல்வர் பணிக்கான நேர்முகத் தேர்வு 14ம் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.
15 ஆண்டுகள் பணி அனுபவம் ஏதேனும் பாடப்பிரிவில் முனைவர் பட்டம், மாநில தகுதித் தேர்வு ,தேசிய தகுதித் தேர்வு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். மேலும் விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழக இணையத்தில் இருந்து www.msuniv.ac.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை செயலாக கட்டணம் ரூபாய் 500க்கான (இந்தியன் வங்கி கணக்கு எண் 925398635) செலுத்திய சீட்டுடன் பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
Click here for latest employment news
No comments:
Post a Comment