Search

உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ஆரோக்கியமான கொழுப்புகள்.. உணவுகளின் பட்டியல் இதோ.!

 ஆரோக்கியமான உணவு என்று வரும் போது கொழுப்பு குறைவாக உள்ள உணவுகள் பலரது டயட்டில் இடம்பெறுகின்றன. இருப்பினும் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, ரத்த கொழுப்பின் அளவை மேம்படுத்த என பல காரணங்களுக்காக நம் டயட்டில் போதுமான அளவு கொழுப்புகள் சேர்க்கப்பட வேண்டும்.

இந்த சூழலில் தான் பல நிபுணர்கள் ஹெல்தி ஃபேட் எனப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய உணவுகளை டயட்டில் சேர்ப்பது, உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவும் மிகவும் இயற்கையான வழி என பரிந்துரைக்கிறார்கள். healthy fat கொண்ட உணவுகளை எடுத்து கொள்வது இதய நோயை உருவாகும் அபாயத்தை குறைக்கிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இது போன்ற பல நன்மைகளை வழங்கும் ஆரோக்கியமான கொழுப்பு இருக்கும் சில உணவுகளை இங்கே பார்க்கலாம்.

சியா விதைகள்: சியா விதைகள் ஒமேகா -3-ன் சிறந்த தாவர அடிப்படையிலான ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. இது அதிகமாக இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு மற்றும் rheumatoid arthritis சிக்கலையும் இவை குறைக்கும்.

முட்டைகள்: முட்டைகள் ப்ரோட்டீனின் சிறந்த ஆதாரமாக இருப்பதோடு அதன் மஞ்சள் கருவில் நல்ல கொழுப்புகளையும் கொண்டுள்ளன. தவிர முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி இருப்பதோடு கல்லீரல், மூளை, நரம்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பி வைட்டமின் மற்றும் Choline உள்ளது.

அவகேடோ: அவகேடோ பழங்களில் ஒலிக் ஆசிட் (oleic acid) நிறைந்துள்ளது, இது ஒரு மோனோ அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் ஆகும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது மற்றும் புற்றுநோயைத் தடுக்க உதவும் என கூறப்படுகிறது.

ஃபேட்டி ஃபிஷ் (Fatty fish​): Fatty fish மீன்களில் அன்சாச்சுரேட்டட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக காணப்படுகிறது. இவை நம்முடைய இதயம் மற்றும் மூளை செயல்பாட்டிற்கு மிக முக்கியமானவையும் கூட.

ஆளிவிதைகள்: ஆளிவிதைகளில் நம் உடலுக்கு நன்மை பயக்கும் அளவிற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து ஆகிய இரண்டும் உள்ளன. இவை ஹார்ட் ரிதம்-ஐ (rhythm) கட்டுப்படுத்துவது, கொலஸ்ட்ராலை குறைப்பது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது.

டோஃபு: மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக இருக்கும் டோஃபு, ஒரு முழுமையான தாவர புரதத்தை (plant protein) நம் உடலுக்கு வழங்குகிறது.

டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் கொழுப்புகளை ஃபிளாவனாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் உள்ளன. இவை இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு நன்மைகள் செய்கின்றன.

யோகர்ட்: கொழுப்பு சேர்க்கப்பட்ட யோகர்ட்டில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நன்மை அளிக்கும் ப்ரோபயாடிக் நுண்ணுயிரிகள் (probiotic microorganisms) உள்ளன. மேலும் அடிக்கடி யோகர்ட் எடுத்து கொள்வது இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க கூடும்.

நட்ஸ்: முக்கியமான ஒரு ஆய்வானது நட்ஸ்களை அடிக்கடி எடுத்து கொள்பவர்களுக்கு எடை அதிகரிப்பு, அதிக எடை அல்லது உடல் பருமன் உள்ளிட்ட நீண்ட கால ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என வெளிப்படுத்தி உள்ளது.

ஆலிவ்கள்: ஆலிவ்களில் காணப்படும் கொழுப்பானது மோனோ அன்சாச்சுரேட்டட் (Monounsaturated) ஆகும். மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு என்பது ஒரு டயட்ரி ஃபேட் ஆகும். அதே போல ஆய்வுகளின்படி ஆலிவ்களில் காணப்படும் oleuropein-ஆனது நீரிழிவு நோயை தடுக்க உதவும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment