முன்னர் எல்லாம் ஊரில் நாலு பேருக்கு சக்கரை நோய் என்பது இருக்கும். ஆனால் இப்போது வீட்டில் நாலு பேருக்கு இருக்கிறது. பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயினால் உயிருக்கு ஆபத்தான பிற சிக்கல்களையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
சர்க்கரை நோய் வந்தாலே போதும். வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். நேரத்துக்கு உணவு உட்கொள்வது, உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றம் போன்ற அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சர்க்கரை அளவை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக சோர்வு, மங்கலான பார்வை, எடை குறைவு என பல பிரச்சனைகளும் வரும். இதை முதலிலேயே அடையாளம் கண்டு அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது. அதற்கான வழிமுறைகளை பொது மற்றும் புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜி.வி.ராஜு எடுத்துரைக்கிறார்.
இப்போதெல்லாம் உடல் நலத்தைக் காப்பது அவசியமாகிவிட்டது. இப்போது அதிகம் நாம் கேள்விப்படும் நீரிழிவு என்பது என் குடும்பத்தில் இதற்கு முன்னால் யாருக்கும் இல்லை. எப்படி எனக்கு வந்தது என்ற கேள்வி தான் பலருக்கும் எழும். குடும்ப வழியில் தான் சக்கரை நோய் வரும் என்ற நிர்பந்தம் ஏதும் கிடையாது.
நமது வாழ்க்கை முறை, நாம் உண்ணும் உணவு மற்றும் மற்ற பழக்கவழக்கங்கள் கூட உங்கள் நீரிழிவு நோய்க்கு காரணமாக இருக்கலாம். சர்க்கரை நோய் வருவதற்கு முன் தகுந்த நடவடிக்கையை உங்கள் உணவு பழக்கத்தில் எடுத்தால் மிகவும் நல்லது என்கின்றார். அது நிறைவு நோய் ஏற்படுவதை இருந்து உங்களை பாதுகாக்கும்.
புகைப்பிடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் உள்ளது. அதனால் புகைக்கும் பழக்கத்தை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. உங்கள் ஆயுளை நீட்டிக்க உதவும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கார்போஹைட்ரேட் (அரிசி) அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள காய்கறிகள், உருளைக்கிழங்கு, சோளம், பட்டாணி ஆகியவற்றைக் குறைவாக உட்கொள்ள வேண்டும். மாவு சத்துள்ள உணவு பொருட்களில் அதிக சக்கரை சத்து இருக்கும். அதனால் ரத்தத்தில் சீக்கிரம் சக்கரை அளவு கூட வாய்ப்புள்ளது.
இன்றைய சூழலில் பெரும்பாலான மக்கள் உட்கார்ந்து தான் இருக்கின்றனர். பள்ளி ஆனாலும் சரி வேலை என்றாலும் சரி,, இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பள்ளி அல்லது வேலை நேரம் தவிர்த்து பகலில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தால் ஓரளவு நோய் வராமல் தடுக்கலாம் என்கின்றார்.
இப்போதெல்லாம் அதிக எடை பல துன்பங்களுக்கு வழிவகுக்கிறது. அதிக எடை கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், அவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிக எடை கொண்டவர்கள் உடனடியாக உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும், ஏனெனில் இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். சக்கரை நோயாளிகளையும் இது பாடாய் படுத்தும்.
No comments:
Post a Comment