எப்போதும் ஒரே விதமான டயட் பிளான் ஃபாலோ செய்வதால் போர் அடித்து விட்டதா? நீங்க ஏன் ஜப்பானிய டயட்டை பின்பற்றக் கூடாது? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிப்பதோடு, உங்கள் ஆயுளையும் அதிகரிக்க கூடும். அது மட்டுமல்லாமல் இது கொழுப்பு மிகு ஈரல் (Fatty Liver) ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் தடுக்கிறது. இந்த பதிவில் ஜப்பானிய உணவு முறை குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக ஜப்பானிய மக்களுக்கு நீண்ட ஆயுள் இருப்பதாகவும், அவர்கள் கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் (Fatty Liver Disease, FLD) உட்பட எந்த ஒரு நாள்பட்ட நோய்களாலும் குறைவாகவே பாதிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உணவு முறைதான். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேமிக்கப்பட்டு அதன் காரணமாக ஏற்படும் வீக்கம் கொழுப்பு மிகு ஈரல் நோய் என்று அழைக்கப்படுகிறது. இது கல்லீரலை மோசமாக பாதிக்கும் ஒரு நோயாகும். இப்பொழுது உங்கள் கல்லீரலை பாதுகாக்கவும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும் ஜப்பானிய உணவு முறை எவ்வாறு உதவுகிறது என்பதை புரிந்து கொள்வோம்.
ஜப்பானிய உணவு முறை என்றால் என்ன, அதன் பலன்கள் யாவை? நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளைத் தரும் உணவுகளை சாப்பிடும் ஒரு உணவு முறையே ஜப்பானிய டயட். இது அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு பேலன்ஸ்டு டயட், மைண்ட்ஃபுல் ஈட்டிங் மற்றும் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவதை உள்ளடக்கியது. ஜப்பானிய உணவு முறையை பின்பற்றுவதன் மூலமாக கொழுப்பு மிகு கல்லீரல் நோய் உட்பட பலவிதமான நாள்பட்ட நோய்கள் ஏற்படுவது குறைந்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கவும், அது சேதமடைவதில் இருந்து பாதுகாக்கவும் போதுமான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் பிற பைட்டோ நியூட்ரியன்ட்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவை இந்த உணவு முறையில் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. வீக்கத்தை எதிர்த்து போராடக்கூடிய பண்புகள் மற்றும் இதயத்தை பாதுகாக்க கூடிய நன்மைகள் அடங்கிய ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்களின் சிறந்த ஆதாரமாக விளங்கக்கூடிய மீன் மற்றும் கடல் சார்ந்த உணவுகளும் இந்த உணவு முறையில் பின்பற்றப்படுகிறது.
"வயிறு 80 சதவீதம் முழுமையாகும் வரை மட்டுமே சாப்பிடுதல்" : ஜப்பானிய உணவு முறையின் மற்றொரு சிறப்பு அம்சம். இது நாம் உட்கொள்ளும் கலோரிகள் அளவை குறைத்து, எடை இழப்பை ஊக்குவிக்கிறது. மேலும் மைண்ட்ஃபுல் ஈட்டிங் பயிற்சியை மேற்கொள்வதன் மூலமாக அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு, உடல் பருமன் மற்றும் செரிமான கோளாறுகள் தவிர்க்கப்படுகிறது.
கொழுப்பு மிகு கல்லீரல் நோயைத் தவிர்க்க ஜப்பானிய உணவு முறை எவ்வாறு உதவுகிறது? சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை போன்றவற்றை தவிர்த்து தாவரம் சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் ஜப்பானிய உணவு முறை கல்லீரலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, அது சேதமடைவதை தடுக்க உதவுகிறது. இவ்வாறு கொழுப்பு மிகு கல்லீரல் நோயிலிருந்து நமது கல்லீரல் பாதுகாக்கப்படுகிறது.
மேலும் ஜப்பானிய உணவு முறையில் பின்பற்றப்படும் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் போன்ற உணவுகளில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் காணப்படுகிறது. இவை குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் அளவுகளை கொண்டுள்ளன. இவ்வாறு இருக்கும் பொழுது செரிமானம் பொறுமையாக நிகழ்த்தப்பட்டு, ரத்த சர்க்கரை அளவுகள் சீராக பராமரிக்கப்படுகிறது. இதன் விளைவாக கொழுப்பு மிகு கல்லீரல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைகிறது. ஜப்பானிய உணவு முறையில் என்னென்ன உணவுகள் பின்பற்றப்படுகிறது?
1. காய்கறிகள்: ஜப்பானிய உணவு முறையை பொறுத்தவரை, காய்கறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. காய்கறிகளை பச்சையாகவோ, ஊறுகாயாகவோ அல்லது பாதி அளவு சமைத்தோ சாப்பிடலாம். முள்ளங்கி, கத்திரிக்காய், பீன்ஸ், காளான் போன்ற பெரும்பாலான உணவுகள் ஜப்பானிய உணவு முறையில் பின்பற்றப்படுகிறது.
2. பழங்கள்: காய்கறிகளைப் போலவே பழங்களும் ஜப்பானிய உணவு முறையில் ஒரு முக்கிய பகுதி வகிக்கிறது. ஸ்ட்ராபெர்ரி, பீச், கிரேப்ஸ் போன்ற பருவநிலை பழங்கள் அதிகமாக சேர்க்கப்படுகிறது.
3. முழு தானியங்கள்: ஜப்பானிய உணவு முறையில் அரிசி, பார்லி, நூடுல்ஸ் மற்றும் சிறுதானியங்கள் போன்ற முழு தானியங்கள் அடங்கும்.
4. கடல் சார்ந்த உணவுகள்: மீன் மற்றும் பிற கடல் சார்ந்த உணவுகள் ஜப்பானிய உணவு முறையின் முக்கிய பகுதி. கானாங்கெளுத்தி, மத்தி மற்றும் வஞ்சரம் போன்ற மீன்கள் இந்த உணவு முறையில் அதிகமாக சேர்க்கப்படுகிறது.
5. பருப்பு வகைகள் : புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ், டோஃபு போன்ற பருப்பு வகைகளும் ஜப்பானிய உணவு முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
6. புளிக்க வைக்கப்பட்ட உணவுகள்: மீசோ, சோயா சாஸ் மற்றும் நட்டோ போன்ற செரிமான ஆரோக்கியத்திற்கு அவசியமான நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை கொண்ட உணவுகள் இதில் அடங்கும்.
7. கிரீன் டீ: கிரீன் டீ என்பது ஜப்பானில் ஒரு பாரம்பரிய பானமாகும். இது பெரும்பாலும் நாள் முழுவதும் பருகப்படுகிறது. கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நமது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை அளிக்கும்.
8. தின்பண்டங்கள்: ரைஸ் கிராக்கர்ஸ், உலர்ந்த கடற்பாசி மற்றும் நொச்சி என்று சொல்லப்படக்கூடிய ரைஸ் கேக் போன்ற பாரம்பரிய ஜப்பானிய தின்பண்டங்கள் மிதமான அளவில் சாப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment