காஃபின் உங்கள் சருமத்தை கருமையாக்குமா: சிறுவயதில் டீ குடிக்க வேண்டும் என்று கேட்கும் போது, டீ குடித்தால் சருமம் கருப்பாகிவிடும் என்று சொல்லி பயமுறுத்துவார்கள் பெற்றோர்கள். இந்த பயத்தின் காரணமாக, பல குழந்தைகள் டீயைத் தவிர்க்கத் தொடங்கிவிடுவார்கள். அத்தகைய சூழ்நிலையில் தேயிலைக்கும் தோலின் நிறத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை இன்று ணாம் இந்த கட்டுரை மூலம் தெரிந்துக்கொள்வோம்.
குழந்தை பருவத்தில், குழந்தைகள் தேநீர் குடிக்கக்கூடாது என்று கூறப்படுகிறது, ஏனெனில் அதில் காஃபின் உள்ளது, இது சிறு குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிக்கிறது, ஆனால் அதே குழந்தைகள் வளர்ந்த பிறகும் அதை உண்மை என்று நம்புகிறார்கள். டீ குடிக்கும் பழக்கம் இல்லாதது நல்லதுதான், ஆனால் தேவையில்லாமல் வாழ்நாள் முழுவதும் வதந்தியை சுமந்து செல்வது சரியல்ல.
தேயிலையால் சருமத்தின் நிறம் கருப்பாக மாறும் என்பதற்கு இதுவரை அறிவியல் சான்றுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தோல் பராமரிப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, தோலின் நிறம் உங்கள் மரபியல், வாழ்க்கை முறை, வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் சருமத்தில் மெலனின் இருப்பதைப் பொறுத்தது. எனவே இதுபோன்ற வதந்திகளைப் பரப்பாமல் இருப்பது நல்லது.
அதிக அளவு டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
* நீண்ட நாட்களாக காஃபியை அருந்தி வருபவர்களுக்கு, வயது முதிர்வு ஏற்படும் போது ஒருவித நடுக்கம் ஏற்படும். ஏனெனில் தேநீர் தூளிலும் காஃபைன் இருப்பதே முக்கிய காரணம். அதனால் முடிந்தவரை டீயை அளவுடன் பருகுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதேபோல் உடலில் பதற்றம், சோர்வு உணர்வு ஏற்படுவது உள்ளிட்ட அறிகுறிகளும் ஏற்படக்கூடும்.
* இயற்கையாகவே தேநீரில் காஃபைன் இருப்பதால், அதை அதிகளவில் உட்கொள்வது உங்களுடைய தூக்கச் சங்கலியை பாதிக்க தொடங்கும். நம் மூளைக்கு உறங்க வேண்டும் என்பதை உணர்த்துகிற ஹார்மோன் தான் மெலடோனின். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், காஃபின் மெலடோனின் செயல்பாட்டை தடுப்பது தெரியவந்துள்ளது.
* மிதமஞ்சிய அளவில் டீ குடிப்பது அல்லது வெறும் வயிற்றில் டீ அருந்துவது எதுக்களித்தல் பிரச்னையை உருவாக்கும். இதனால் வயிற்றுள்ள அமிலத்தின் செயல்பாடு அதிகரித்து, வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
* நமது உடல் காஃபைனை எளிதாக உள்ளிழுத்துக்கொள்ளும். இதன்காரணமாக மூளையில் ஏதாவது பிரச்னை ஏற்படும். காஃபின் ஒரு தூண்டுதலாகக் கருதப்படாவிட்டாலும், அது நமது மூளையில் சில செயல்பாட்டை தடுக்கிறது. இதனால் மூளை கூடுதலாக டோபமைன் மற்றும் எண்டோர்பின்களை வெளியிட வழிவகுக்கும்.
* தேநீரில் காஃபைன் இருப்பதால் தலைவலியை ஏற்படுத்தும். ஒரு நாளில் பலமுறை டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், காஃபைன் இருப்பதன் காரணத்திற்காகவே தலைவலியை நீடித்து இருக்கும். அதிக டீ குடிப்பதால், காஃபின் மூளையைச் சுற்றியுள்ள ரத்த நாளங்களை சுருக்கி விடுகிறது. அதன்காரணமாகவே தலைவலி ஏற்படுகிறது.
No comments:
Post a Comment