பப்பாளி பழத்தில் பல நன்மைகள் உண்டு. பப்பாளி வயிற்றுக்கு சிறந்த பழம் என கூறலாம். இந்த பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. பழம் மட்டுமல்லாது அதன் விதைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த விதைகள் மோசமான செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாது நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அடங்கியுள்ளது.
நார்ச்சத்து நிறைந்த பப்பாளி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது அதுமட்டுமல்லாமல் ஹெல்த்லைன் செய்தியின்படி, பப்பாளி விதைகளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் இருக்கலாம் என தெரிவித்துள்ளது பப்பாளியில் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
சத்து நிறைந்தது : பப்பாளி பழத்தில் சத்து மட்டுமின்றி அதன் விதைகளும் பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஊட்டச்சத்து நிறைந்த பப்பாளி விதைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இந்த விதைகளில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் உள்ளதால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பப்பாளி விதைகளில் நார்ச்சத்து நிரைந்துள்ளது.
நோய்த்தொற்று தடுப்பு : பப்பாளி விதைகளில் உடலில் ஏற்படும் தொற்றுகளுக்கு எதிராக போராடி அவற்றைத் தடுக்க உதவும் பண்புகள் உள்ளது. சிறப்பு வகை பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்க பப்பாளி விதைகள் உதவிகரமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக மேலும் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறுநீரக செயல்பாட்டைப் பாதுகாத்தல் : நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிறுநீரகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள அதிகப்படியான திரவம் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. பப்பாளி விதைகளை சாப்பிடுவது சிறுநீரக செயல்பாடு மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இது குறித்து மேலும் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் : பப்பாளி விதையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. சில ஆய்வுகளில் பப்பாளி விதையில் புற்றுநோயை தடுக்கும் பண்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. பப்பாளி விதைகளை உட்கொள்வது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். டெஸ்ட் டியூப் கொண்டு செய்யப்பட்ட ஓர் ஆய்வில் பப்பாளி விதைகள் வீக்கம் மற்றும் புற்றுநோய் வளர்ச்சியிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment