நாம் உண்ணும் உணவுகள் தான் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல சரும ஆரோக்கியத்திற்கும் நாம் டயட்டில் சேர்த்து கொள்ளும் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது நம் தோற்றத்தில் நேரடியாக எதிரொலிக்கும். உங்களுக்கு பளபளப்பான சருமம் வேண்டும் என்றால் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லது அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு அடங்கிய உணவுகளுக்கு பதில் சூப்பர் ஃபுட்களை டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவும் சிறந்த காய்கறிகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
கேரட்: பீட்டா கரோட்டின் நிறைந்திருக்கும் கேரட்டானது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்களை நமக்கு வழங்குவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் சேதத்திலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. இதனை நம் உடல் வைட்டமின் ஏ-வாக மாற்றி கொள்கிறது. சரும ஆரோக்கியத்தை மற்றும் சருமத்தின் இளமை தோற்றத்தை பராமரிக்கவும் வைட்டமின் ஏ உதவுகிறது.
குடை மிளகாய்: வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக இருக்கின்றன குடை மிளகாய்கள். டயட்டில் அடிக்கடி குடை மிளகாய் சேர்த்து கொள்வது கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு, நம் சருமத்திற்கு வலிமை மற்றும் எலாஸ்டிக்சிட்டியை அளிக்கிறது.
தக்காளி: தக்காளியில் இருக்கும் லைகோபீன் (lycopene) ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் இளமை தோற்றத்தை பராமரிப்பதிலும் லைகோபீன் முக்கிய பங்கு வகிக்கிறது.
வெள்ளரி: ஹை வாட்டர் கன்டென்ட் கொண்ட வெள்ளரிகளை டயட்டில் சேர்ப்பது நம் சருமத்தை ஹைட்ரேட்டாக வைக்க பெரிதும் உதவுகின்றன. சரும வீக்கத்தையும் குறைக்கின்றன. மேலும் வெள்ளரியில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் கே ஆகியவை சருமத்தை பிரகாசமாக்க உதவுகின்றன.
காலே: இந்த ஆரோக்கியமான காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, அத்துடன் தாமிரம் மற்றும் இரும்பு போன்ற பல மினரல்ஸ் நிரம்பியுள்ளன. இவை அனைத்தும் நம் சருமத்தை இளமையாக மற்றும் ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. காலேவில் உள்ள வைட்டமின் சி சருமத்தின் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.
ப்ரோக்கோலி: வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த ப்ரோக்கோலி கொலாஜன் உற்பத்தியை சப்போர்ட் செய்கிறது மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
அவகேடோ: அவகேடோ பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் நிறைந்துள்ளன. இதில் அடங்கியிருக்கும் சத்துக்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இயற்கையான பளபளப்பை அளிக்கிறது.
பூசணி: பூசணிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது, இது cell turnover-ஐ ஊக்குவிக்கிறது மற்றும் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. தவிர ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடும் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களும் பூசணிக்காயில் உள்ளன.
No comments:
Post a Comment