திண்டுக்கல்லில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்.. இளைஞர்களே தவற விடாதீங்க! - Agri Info

Adding Green to your Life

June 14, 2023

திண்டுக்கல்லில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்.. இளைஞர்களே தவற விடாதீங்க!

 திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளியன்று (16.06.2023) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்புத் துறையால், படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.

அதன்படி ஜுன்-2023-ஆம் மாதத்திற்குரிய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 16.06.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30-மணிக்கு நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிபரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளிநகல் (ஜெராக்ஸ்)-களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை வேலையளிப்பவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழிற்பழகுநர் பயிற்சிக்குத் தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment