வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - Agri Info

Adding Green to your Life

June 5, 2023

வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 தொடக்கக் கல்வித் துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் தொடர்புடைய இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றிருக்க (Any Degree with B.Ed. Degree ) வேண்டும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 1.7. 2023 அன்று  40 வயதுக்குள் இருக்க வேண்டும்.  பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் 5 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

மாத சம்பளம்: 36,900-1,16,600 வரை

முக்கியமான நாட்கள்: 

ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 05.06.2023

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 06-06-2023 முதல் 05.07.2023  வரை

தேர்வு நடைபெறும் நாள் : 10.09.2023

இதற்கான விண்ணப்பங்களை trb.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணமாக ரூபாய் 600/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரூ.300-ஐ விண்ணப்பக்  கட்டணமாக செலுத்த வேண்டும்.காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை, பதிவிறக்கம்செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment