தமிழகத்தில் தற்போது வளர்ந்து வரும் இளம் சமுதாய மக்களுக்கு பிரண்டை என்றாலே என்னன்னு தெரியாத சூழ்நிலை இருந்து வருகிறது.
பொதுவாக, பிரண்டை என்பது அனைத்து கடைகளிலும் கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு என்று சொல்லலாம். இந்த பிரண்டையானது மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பொட்டல் காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரும் தன்மை கொண்டது.
இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே அதிகப்படியான மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே திண்டுக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிகமாகக் கிடைக்கிறது.
எந்த கடைகளிலுமே கிடைக்காத இந்த பிரண்டையை யார் அதிகம் சாப்பிட விரும்புவார்கள் என்று ஒரு சின்ன அபிப்பிராயம் நம் அனைவருக்கும் தோன்றுவது இயல்புதான்.
இருந்தாலும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மணியகாரன்பட்டி பகுதி மக்கள் இந்த பிரண்டையைத் தேடி காடு மேடெல்லாம் அலைந்து கற்கள் முட்கள் இருக்கும் என கவலை இல்லாமல் பிரண்டை பறிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதியில் பிரண்டை தேடி செல்லும் கோமதி என்பவரிடம் கேட்டபோது, தன் மகனுக்கு சில வயிற்று பிரச்சனை இருப்பதாகவும், இந்த வயிற்றுப் பிரச்சனைகளை சரி செய்ய பிரண்டை உதவியாக இருக்கும் எனவும் , இந்தப் பிரண்டையானது கடையில் கிடைக்காது எனவும் காடு மேடுகளில் தேடி வந்துள்ளோம் எனவும், மேலும் இந்த பிரண்டையை பற்றி இளைய சமுதாயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும், எனவே பிரண்டையின் மகத்துவத்தை புரிந்து கொண்டு பிரண்டை வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார், மேலும் பிரண்டை எப்படி வளர்க்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment