இந்தியாவில் 7 கோடிக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நீரிழிவு நோயின் தலைநகரம் என இந்தியா உலகளவில் அறியப்படுகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரித்து கார்போஹைடரேட்ஸ், புரதம் மற்றும் கொழுப்பின் மெட்டபாலிஸம் மாறுகிறது. இதன் காரணமாக இன்சுலின் சுரப்பதில் அல்லது இன்சுலின் செயல்பாட்டில் ஒழுங்கற்ற முறை காணப்படுகிறது. அதிகரிக்கும் நகரமயமாதல், அதிக கலோரி மற்றும் சுத்திகரிகப்பட்ட குறை நார்ச்சத்து உணவுகள், எந்த உடல் இயக்கமும் இன்றி உட்கார்ந்தே இருப்பது, அதிகமான உடல் எடை போன்ற காரணங்களால் இந்தியாவில் அதிகளவில் நீரிழிவு நோயாளிகள் இருக்கிறார்கள்.
ஆரோக்கியமான உணவு, நல்ல உடலியல் செயல்பாடு, புகையிலை மற்றும் மதுபானத்தை தவிர்த்தல் போன்றவைகளால் சர்க்கரை வியாதி வராமல் 80% தடுக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு உணவில் மாற்றம் செய்யும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
சீரான மற்றும் ஒரேப்போன்ற உணவு: நீரிழிவு நோய்க்காக இன்சுலின் அல்லது மாத்திரைகள் சாப்பிடுபவராக இருந்தால் சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். முக்கியமாக, வழக்கத்தை விட குறைவாக உண்பது, நேரம் தவறி உணவை சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் தவிர்ப்பதால் சர்க்கரை அளவு குறைந்து ஹைபோக்ளைசீமியா ஏற்படும். ஆகவே எப்போதும் போல் சாப்பிடுங்கள். சாப்பிடும் நேரத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள்.
உணவில் கார்போஹைடரேட்ஸ் அளவு : உணவில் கார்போஹைடரேட்ஸை எவ்வுளவு எடுத்துக் கொள்கிறோம் என்பதை வைத்துதான் சர்க்கரை அளவு மாறுபடும். ஆகவே தனிநபரின் தேவைகளைப் பொறுத்து கார்போஹைடரேட்ஸை உணவில் சேர்ப்பது முக்கியம். முழு தானியம், திணை போன்றவற்றோடு நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உணவில் சேர்த்தால் சர்க்கரை அளவு உயராமல் பார்த்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் பால் குடிக்கலாமா?
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள நன்மைகள்:
- நம் உடல் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. இதில் முக்கியமான விட்டமிங்களும் கால்சியம், பாஸ்பரஸ் ரிபோஃபிளாவின் மற்றும் விட்டமின் பி12 போன்றவை அதிகளவில் உள்ளன.
- எலும்பின் ஆரோக்கியத்திற்கும் உறுதிக்கும் பால் முக்கிய பங்காற்றுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பின் உறுதித்தன்மை திடீரென்று குறையும். தொடர்ந்து பால் அருந்தி வரும் நபருக்கு இப்பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு குறைவு.
- பால் அருந்துவதால் ரத்த அழுத்தம் குறையும், இதய நோய்கள் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.
பால் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் டைப் 2 நீரிழிவு நோய் வரும் ஆபத்து குறையும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் பாலில் உள்ள புரதங்கள். இவை உடலில் உள்ள இன்சுலினை அதிகரித்து ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை குறைக்கிறது. ஆகவே ஆரோக்கியமான நபர்களும் நீரிழிவு நோயாளிகளும் பால் அருந்துவதில் எந்தப் பிரச்சனையுமில்லை.
எனினும் பாலில் லாக்டோஸ் உள்ளது. ஆகவே நாம் தினசரி உட்கொள்ளும் கார்போஹைடரேட்ஸ் அளவோடு இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 100 மில்லி பசும் பாலில் 5 கிராம் கார்போஹைடரேட்ஸ் உள்ளது. அதுவே 100 மில்லி எருமை மாட்டு பாலில் 8 கிராம் கார்போஹைடரேட்ஸ் உள்ளது. ஆகவே நீரிழிவு நோயாளிகளின் தினசரி உணவில் பால் சேர்க்கும் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மற்ற கார்போஹைடரேட்ஸ் பொருட்களில் இருப்பதை விட பால் மற்றும் தயிரின் க்ளைகோமிக் இண்டக்ஸ் (GI) மிகவும் குறைவே. பாலின் வகையை பொறுத்து இது 31-37 என்ற அளவுக்குள் இருக்கும். இவ்வுளவு குறைவான GI இருப்பதால், இதை உண்வைல் சேர்ப்பதால் அந்தளவிற்கு சர்ரக்கரை அளவு ஏறாது. ஆனால் சுவையேற்றப்பட்ட பால் சாப்பிடுவதை தவிருங்கள். ஏனென்றால் இதில் அதிகளவு சர்க்கரை இருப்பதால் நம் உடலின் குளுக்கோஸ் அளவு உயரக்கூடும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு, பெரியவர்கள் என்றால் தினசரி 300மில்லி பால் அருந்த வேண்டும். நீரிழிவு நோயாளியாக இருந்தால், அவரின் தேவைகளை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு அதிக கொழுப்பு மற்றும் கலோரி தேவையா அல்லது எடை குறைப்பதற்காக பாலில் உள்ள புரதம் மட்டும் வேண்டுமா என்பதை பொறுத்தே அவர் எந்த வகையான பாலை (பசும் பால், எருமை பால், ஆடை நீக்கிய பால்) குடிக்கலாம் என்பதை முடிவு செய்ய முடியும்.
- புரதம், விட்டமின், மினரல்கள் போன்றவை பாலில் அதிகமாக உள்ளன
- பாலில் நம் உடலுக்கு தேவையான நிறைய நன்மைகள் உள்ளன. ஆகவே இதை நீரிழிவு நோயாளிகளும் தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
- பாலில் குறைவான GI இருப்பதாலும், இதிலுள்ள புரதங்கள் சர்க்கரை அளவை குறைவாகவே உயர்த்தும் என்பதாலும் பாலின் மூலம் கிடைக்கும் கார்போஹைடரேட்ஸ் அளவையும் நாம் தினசரி உண்ணும் உணவின் கார்போஹைடரேட்ஸ் அளவோடு சேர்த்து கணக்கிட வேண்டும். அப்போதுதான் நிறைய கார்போ எடுத்துக்கொள்வதை தவிர்க்க முடியும்.
No comments:
Post a Comment