"நீரின்றி அமையாது உலகு" என்ற பொன் மொழியை நாம் அனைவரும் கேட்டிருக்க வேண்டும். அந்த வகையில் ஆக்ஸிஜனுக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமாக கருதப்படுவது தண்ணீர்.
நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதில் தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதர்கள் உயிர் வாழ தண்ணீர் ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நமது உடல் 50 முதல் 70 சதவீதம் நீரால் ஆனது. இதிலிருந்து நாம் உயிர் வாழ நீர் எத்தனை அவசியம் என்பது புரிந்திருக்கும். எனினும் இது தண்ணீர் குடிக்க பிடிக்காதவர்களுக்கும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதை வெறுப்பவர்களுக்கும் ஒரு பிரச்சினையாக அமைகிறது.
நம் உடலை நீரேற்றமாக வைப்பது சோஷியல் மீடியா யூஸர்களிடையே இடையே ஒரு பெருமையாக தற்போது கருதப்படுகிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கும், சருமத்தின் பளபளப்பிற்கும் நீரின் முக்கியத்துவத்தை பலர் எடுத்துரைத்து வருகின்றனர். தினமும் குறைந்தபட்சம் 2 - 3 லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். இது ஒரு பொதுவான அளவு என்றாலும் கூட, ஒவ்வொருவரின் உடல் வகையை பொருத்து நீரின் தேவை மாறுபடும்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு விதமான பானங்கள் கொடுக்கப்பட்டு, அவர்களின் நீரேற்ற அளவுகள் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் கணக்கிடப்பட்டது. ஒரு லிட்டர் இன்ஸ்டன்ட் காபி மற்றும் பீரில், நீரில் இருப்பது போன்ற அதே அளவு ஈரப்பதம் இருப்பது இதன் மூலம் தெரியவந்தது. எனினும், பால் குடிப்பதன் மூலமாக நீரேற்ற அளவுகள் அதிகபட்சமாக இருப்பது ஆச்சரியத்தை அளித்தது.
தண்ணீருக்கு எந்த ஒரு பானமும் ஈடாகாது என்பதை இந்த ஆய்வில் பங்கேற்ற டாக்டர் ரிச்சன் தெரிவித்தார். டீ மற்றும் காபி ஆகியவை நீரிழப்பை ஏற்படுத்தக்கூடிய டையுரிட்டிக்காக கருதப்படுகின்றன. பொதுவாக டீ, காபி குடித்த உடனே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான தேவையை நீங்கள் உணர்ந்து இருக்கலாம். Fizzy ட்ரிங்க்ஸ் மற்றும் ஜூஸ்கள் நமக்கு நீரேற்றத்தை அளித்தாலும் அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு காரணமாக வேறு விதமான ஆரோக்கிய கேடுகள் ஏற்படலாம்.
காபின் கலந்த பானங்களை காட்டிலும் பழச்சாறுகள் சிறந்தவை என்றாலும் கூட, அவை ஒரு நபரின் ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதன் மூலமாக நீரிழப்பை ஏற்படுத்த கூடும் என்பதையும் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, நீர்ச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பல நோய்களைத் தடுக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள். அதோடு டீ, காபி போன்றவற்றை மிதமான அளவு குடிப்பது நல்லது.
0 Comments:
Post a Comment