பள்ளி என்று வந்துவிட்டால் குழந்தைகளோடு வெளியே போவது இயல்பு. கொஞ்சம் பெரிய பசங்களை வெளியில் கூட்டிச் செல்லும் போது பயணத்திற்கான தயாரிப்புகளை அவர்களே செய்து கொள்வார்கள். அதே நேரம் சிறு வயது குழந்தைகளை வெளியில் கூட்டி செல்லும்போது அதற்கான தயாரிப்புகளை எல்லாம் பெற்றோர் தான் செய்ய வேண்டும். அப்படி குழந்தைகளை டூருக்கு அழைத்துச்செல்லும் போது தேவைப்படும் டிப்ஸ் தருகிறோம்.
முன்கூட்டியே திட்டமிடுங்கள்: குழந்தைகளுடன் ஒரு பயணம் என்றால் கவனமாக திட்ட வேண்டும். சுற்றி ,தாங்கும் இடங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு ஏற்றதா என்று பார்க்க வேண்டும். இரு நகரத்திற்கு சுற்றுலா செல்லும் பொது அவர்கள் ஆர்வமாக பார்க்கவும் கற்றுக்கொள்ளவும் உதவும் இடங்களும் அந்த பட்டியலில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
தேவையான அனைத்து பொருட்களையும் பேக் செய்வது அவசியம். ரொம்ப சின்ன குழந்தைகளை அழைத்து செல்லும்போது அவர்களுக்கான டயப்பர்கள், துடைப்பான்கள், கூடுதல் உடைகள், தின்பண்டங்கள், பொம்மைகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களின் பட்டியலை உருவாக்கி அதன்படி எடுத்துச்செல்லவும்.
குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்: பயண திட்டத்தை உருவாக்கும் போது, கொஞ்சம் பெரிய குழந்தைகள், கணக்கு போடும் அளவு பெரியவர்கள் என்றால் அவர்களையும் ஈடுபடுத்தி பயண திட்டங்களை உருவாக்குங்கள். அவர்களுக்கு பிடித்தமான இடங்களை தேட வைத்து அதன் தகவல்களை தெரிய வைத்து அதற்கு ஏற்ப பயண திட்டத்தை உருவாக்குங்கள்.அதே போல பேக்கிங் செய்யும் பொது அவர்களது பொருட்களை அவர்களே எடுத்துவைத்து கிளம்ப பழக்குங்கள்.
சில பயணங்கள் குழந்தைகளுக்கு மிகவும் சோர்வாக இருக்கும், இதன் விளைவாக அமைதியின்மை, கோபம், எரிச்சல் ஏற்படும். அவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க பல பொழுதுபோக்கு சார்ந்த பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வண்ணப் புத்தகங்கள், புதிர்கள் மற்றும் கையடக்க விளையாட்டு பொருட்களை பேக் செய்யலாம்.
குறுகிய இடைவேளைகள்: நீண்ட பயணங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக இருக்கும். எனவே சாலைப் பயணங்களின் போது சிறிய இடைவெளிகளைத் திட்டமிடுங்கள். வழியில் உள்ள பூங்காக்கள் அல்லது விளையாட்டு மைதானங்களில் விளையாடும் நேரத்தைச் சேர்த்துக்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கவும், பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றவும் உதவும்.
பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள் : பயணம் செய்யும்போது அவர்கள் இருக்கை பெல்ட்கள் அல்லது பாதுகாப்பு சாதனைகளை அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நெரிசலான இடங்களில் அவர்களை உன்னிப்பாகக் கண்காணித்துகொள்ளுங்கள். உள்ளூர் அவசர எண்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முதலுதவி பெட்டியை கையில் வைத்துக்கொள்ளுங்கள்.
சிற்றுண்டி : பசியுள்ள குழந்தைகள் விரைவில் எரிச்சலடையலாம், எனவே ஆரோக்கியமான தின்பண்டங்களை பேக் செய்யுங்கள். பழங்கள், சிப்ஸ், சாக்லேட் பார்கள் , சின்ன சாண்ட்விச்கள் போன்ற உணவுகளை எடுத்துச் செல்லவும். கூடுதலாக, போதுமான அளவு தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள்.
நினைவுகளை உருவாக்குதல் : குழந்தைகளுடன் பயணம் செய்வது அந்த இடத்தைப் பற்றியது மட்டுமல்ல, நினைவுகளை உருவாக்குவதும் கூட என்பதை மறந்துவிடாதீர்கள். குழந்தைகளுக்கும் அந்த பருவத்தின் நினைவுகள் பொங்கல் மூலம் தான் கடத்தப்படும். நிறைய படங்களை எடுங்கள், விளையாடுங்கள், கதைகள் சொல்லுங்கள்.
No comments:
Post a Comment