இந்தியாவில் பலவிதமான திருவிழாக்களை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், CSIR-IIIM ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஒரு வாரம் ஒரு ஆய்வகம்' என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியான, ஜம்முவின் பதேர்வாவில் நாடாகும் லாவெண்டர் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
லாவெண்டர் புரட்சியை மையப்படுத்தி நடக்கும் 2 வது ஆண்டு திருவிழா ஆகும். காஷ்மீர் பகுதியில் உள்ள பதேர்வா இந்தியாவின் லாவெண்டர் தலை நகரம் என்றும் , அக்ரி ஸ்டார்ட்அப் இடமாகவும் போற்றப்படுகிறது . இந்த திருவிழாவின் முக்கியங்களை பார்ப்போம்.
லாவெண்டர் அதன் நறுமண ஊதா பூக்கள் மற்றும் இனிமையான வாசனைக்காக அறியப்பட்ட ஒரு மணம் கொண்ட பூக்கும் தாவரமாகும் . அரோமாதெரபி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சமையல் பயன்பாடுகளில் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட எண்ணெய்க்காக இது பரவலாகப் பயிரிடப்படுகிறது .
இந்தியாவில் காஷ்மீர் சூழல் இந்த பயிர் வளர்வதற்கு சாதகமாக இருப்பதால் வணிக ரீதியாக இதை வளர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஊதா அல்லது லாவெண்டர் புரட்சி 2016 இல் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) அரோமா மிஷன் மூலம் தொடங்கப்பட்டது.
ஜம்மு & காஷ்மீரின் கிட்டத்தட்ட அனைத்து 20 மாவட்டங்களிலும் லாவெண்டர் சாகுபடி நடைமுறையில் உள்ளது.இத்திட்டத்தின் கீழ், முதல் முறை விவசாயிகளுக்கு இலவச லாவெண்டர் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன , அதே நேரத்தில் லாவெண்டர் சாகுபடி செய்தவர்களுக்கு ஒரு மரக்கன்றுக்கு ரூ.5-6 கட்டணம் பெறப்படுகிறது.
லாவெண்டர்பூக்களில் இருந்து பிரியும் லாவெண்டர் நீர், தூபக் குச்சிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. பூக்களில் இருந்து எண்ணெயில் வடிகட்டப்பட்ட பிறகு உருவாகும் ஹைட்ரோசோல், சோப்புகள் மற்றும் ரூம் ஃப்ரெஷ்னர்கள் தயாரிக்கப் பயன்படுகிறது
இந்த திருவிழாவின் போது, உள்ளூர் லாவெண்டர் சாகுபடி பற்றிய விழிப்புணர்வும் , சாகுபடி செய்யத்தேவையான கன்றுகளும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் லாவென்டர் எண்ணெய் மற்றும் இதர பொருட்கள் தயார் செய்யும் முறைகளையும் பார்க்கலாம். லாவெண்டர் வயல்கள் இடையே படங்களையும் எடுக்கலாம்.
No comments:
Post a Comment