பெருஞ்சாணி அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இந்த அணை பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது கன்னியாகுமரியிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு அழகான சுற்றுலாத்தலமாகும்.
இந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், குலசேகரம் என்னுமிடத்திலிருந்து 10 கி.மீ. கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.இதன் நீர் கொள்ளளவு 72 அடி ஆகும்.
குமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் மறக்காம இந்த அணைய பார்த்து ரசிக்கலாம் . நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் இருந்தும் குலசேகரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இந்த அனைக்கு பஸ் வசதிகள் இருக்கு சுற்றிலும் நீர் இயற்கை காற்று என இந்த அணை மறக்க முடியாத அனுபவத்தை எல்லாருக்கும் கொடுக்கும் இந்த அணை குமரி மாவட்டத்தில் மிக பெரிய அணை ஆகும்.
No comments:
Post a Comment