உடற்பயிற்சி செய்யும் பொழுது நாம் வலிமையாகிறோம். உடற்பயிற்சி செய்யும் பொழுது நமது ரத்த ஓட்டம் அன்றைய நாளில் ஆக்டிவேட் செய்யப்படுகிறது.
வாழ்க்கையில் உங்களுக்கு மூன்று டாக்டர்கள் தான் தேவை.
- நல்ல ஊட்டச் சத்தான உணவுகள்.
2. உடற்பயிற்சி.
3. நல்ல தூக்கம்.
இந்த மூன்று டாக்டர்கள் உங்களுடன் இருந்தால் உங்களுக்கு பிரத்யேகமாக எந்த மருத்துவர்களும் தேவைப்படமாட்டார்கள்
அந்த வகையில் இதில் உடற்பயிற்சி என்பது மிக மிக முக்கியமான டாக்டராக இருக்கிறார். முதலில் உடற்பயிற்சி என்றாலே அது எடை குறைப்புக்கானதாக பார்க்கப்படுகிறது. நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.. பயிற்சிக்கும் எடை குறைப்புக்கும் மிக மிக சின்ன தொடர்பு தான் இருக்கிறது.
ஆனால் குறைவாக சாப்பிடுவதற்கும் எடை குறைப்புக்கும் பெரிய தொடர்பு இருக்கிறது. முதலில் உடற்பயிற்சியை ஏன் நாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
உடற்பயிற்சி செய்யும் பொழுது நாம் வலிமையாகிறோம். இரண்டாவது உடற்பயிற்சி செய்யும் பொழுது நமது ரத்த ஓட்டம் அன்றைய நாளில் ஆக்டிவேட் செய்யப்படுகிறது. இதயம் வேகமாக துடிக்கும் பொழுது ரத்த ஓட்டம் எல்லா உடல் உறுப்புகளுக்கும் சென்று சேரும்.
நமது உடலில் பயிற்சி செய்யும் பொழுது சில ஹார்மோன்கள் ரிலீஸ் ஆகும். அதே போல உடற்பயிற்சி செய்யும் போது எண்டார்ஃபின் என்ற ஹார்மோன் வெளிப்படும். இது உண்மையில் நமது உடலே நமக்கு தரக்கூடிய வலி மாத்திரை என்று சொல்லலாம். இது நாம் உடற்பயிற்சி செய்யும் போது தான் நமக்கு கிடைக்கிறது. ஆகவே நாம் உடற்பயிற்சி செய்யும் போது நமக்குத் தேவைப்படுகின்ற வலி மாத்திரைகள் குறைகின்றன.
உடற்பயிற்சி செய்யும் பொழுது நமது உடலில் உள்ள தசைகள் வளர்கிறது.இந்த வளர்ச்சி நமக்கு வயதானாலும் நம்மை இளமையாக காட்டும். உடற்பயிற்சி செய்யும் பொழுது நமது மூளையில் உள்ள செல்கள் சாகாமல் இருக்கும். ஆகவே உடற்பயிற்சி செய்யுங்கள்!
No comments:
Post a Comment