IDBI வங்கி 1036 Executive காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூன் 7 கடைசி நாள்!
Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை IDBI வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த வங்கி பணிக்கு என மொத்தம் 1036 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த வங்கி பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 7 கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IDBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Executive பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் 1036 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் மே 2, 1998 முதல் மே 1, 2003க்குள் பிறந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் Online Test (OT), Document Verification (DV) மற்றும் Pre Recruitment Medical Test (PRMT) ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf
Apply Online
Click here for latest employment news
No comments:
Post a Comment