TNHRCE ராமநாதபுர வேலைவாய்ப்பு 2023 – தமிழ் தெரிந்தால் போதும் || சம்பளம்: ரூ.41800/-
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வராள் மற்றும் முத்தாலம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள ஓதுவார் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு இந்து மதத்தை சார்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.07.2023 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருக்கோயில் காலிப்பணியிடங்கள்:
ஓதுவார் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
ஓதுவார் கல்வி தகுதி:
தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனத்தில் நடத்தப்படும் தேவார பாடசாலையில் மூன்று ஆண்டுகள் பயின்றமைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.13200-41800/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.07.2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment