Women Health : நீங்கள் அதிகளவிலான சானிட்டரி நாப்கின்கள் அல்லது டாம்பான்களை வாங்கி விட்டீர்களா? அவற்றை பயன்படுத்த முடியவில்லையா? உங்களின் சானிட்டரி பொருட்கள் காலாவதியாகிவிட்டதா? எனில் அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது.
காலாவதியான மாதவிடாய் பொருட்களை பயன்படுத்துவது உங்கள் உடலுக்கு ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
சரும பராமரிப்பு அல்லது மேக் அப் பொருட்கள் என எதுவாக இருந்தாலும் காலாவதியாகும் தேதிக்கு முன்னர், உபயேகப்படுத்த வேண்டும். காலாவதியாகிவிட்டால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். சிலர் அதை உபயோகிப்பார்கள். ஆனால் பக்கவிளைவுகள் ஏற்பட்டு அவதிப்படுவார்கள்.
அதேபோல் சிலர் அதிகளவிலான சானிட்டரி பொருட்களை வாங்கி குவித்துவிடுவார்கள். ஆனால் மாதம் ஒருமுறைதான் மாதவிடாய் வரும். அதுவும் 3 முதல் 5 நாட்களுக்குத்தான் இருக்கும். இது வழக்கமான அளவு. ஆனால், ஒரு சிலருக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதிகம் தேவைப்படும். எனவே அதிகளவு நீங்கள் பயன்படுத்த முடியாது. எனவே நீங்கள் அளவுக்கு அதிகமாக வாங்கி வைத்திருந்தீர்கள் என்றால் அவை காலாவதியாகிவிடும். காலாவதியான மாதவிடாய் பொருட்களை உபயோகிப்பதும் பாதுகாப்பனதல்ல.
மாதவிடாய்க்கு பயன்படுத்தப்படும் சானிடரி நாப்கீன்களும், டாம்பான்களும் 5 ஆண்டுகள் வரை உபயோகப்படுத்தலாம். மென்ஸ்ட்ரூவல் கப்பை கூடுதலாக சில ஆண்டுகள் பயன்படுத்த முடியும். ஆனாலும் மென்ஸ்ட்ரூவல் கப்பை 1 அல்லது 2 ஆண்டுகளில் மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் ஓட்டை அல்லது கிழிந்துவிட்டால் உடனடியாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே எந்த பொருளுக்கு காலாவதியான தேதியை பார்த்து உபயோகிப்பதுபோல், இதற்கும் அந்த தேதியை பார்த்துவிடுவது நல்லது.
அவ்வாறு காலாவதியாகும் பொருட்களை நீங்கள் உபயோகித்துக்கொண்டிருந்தால் அது உங்களுக்கு நிச்சயம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மேலும் அப்படி காலாவதியானால் அவை முறையாக செயல்படாது. அது மாதவிடாயின்போது கறையை ஆடைகளில் ஏற்படுத்துவதுடன், அசௌகரியமாக இருக்கும். மேலும் காலாவதியான மாதவிடாய் பொருட்களில் குருதி இருக்கும். அதன்மூலம் உங்களுக்கு பாக்டீரியா தொற்றுக்களை அந்தரங்க உறுப்புக்களில் ஏற்படுத்தும்.
காலாவதியான பொருட்களை பயன்படுத்தும்போது அது கட்டியை ஏற்படுத்துகிறது. டாம்பான்களிலும், சானிடரி நாப்கீன்களிலும் உள்ள வேதிப்பொருட்கள் உங்கள் தோல்களில் தடிப்புகளை ஏற்படுத்துகிறது.
பிறப்புறுப்புகளில் இருந்து அசாதாரணமான வெளியேற்றம் இருக்கலாம். அது மாதவிடாய் ரத்தம் அல்லது வெள்ளைபடுதலை அதிகரிக்கலாம். காலாவதியான மாதவிடாய் பொருட்களை உபயோகிக்கும்போது, பூஞ்சை தொற்று ஏற்படலாம். பெண்ணுறுப்பைச்சுற்றி தொற்று ஏற்படுத்தும்.
தோல் அலர்ஜி
தோல்களில் அலர்ஜி ஏற்படுவதும் மற்றொரு ஆபத்து. இதனால் நீங்கள் சரும நிபுணர்களிடம் மருத்துவத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்
காலாவதியான டாம்பான்களை உபயோகிக்கும்போது, பாக்டீரியாக்கள் தொற்று உங்கள் ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகிறது.
பாத்ரூம்களில் உங்கள் சானிட்டரி பொருட்களை வைக்காதீர்கள். பாத்ரூம்கள் எப்போதும் காயாமல் ஈரத்தன்மையுடனே இருப்பதால் நீங்கள் அந்தரங்க உறுப்புகளில் பயன்படுத்தும் பொருட்களில் பாக்டீரியா உருவாக வழிவகுக்கும். அவற்றை எப்போதும் உலர்வான இடத்தில் வைத்திருங்கள். அவற்றை அதற்கான பாக்கெட்களில் போட்டுவைத்திருங்கள். வேறு எதிலும் அடைத்து வைக்காதீர்கள். கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கட்டும்.
டாம்பான்களோ சானிட்டரி நாப்கீன்களோ அவற்றை சரியான இடைவெளியில் மாற்றுங்கள், மென்ஸ்ட்ரூவல் கப்களை பயன்படுத்தும்போது அவற்றை நீங்கள் ஒவ்வொரு 3 அல்லது 4 மணி நேரத்திலும் மாற்ற வேண்டிய தேவையில்லை. அதுவே சானிட்டரி நாப்கீன்கள் அல்லது டாம்பான்கள் எனில், அவற்றை ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும்.
அப்போதுதான் அந்தரங்க உறுப்பில் தொற்றுகளை ஏற்படுத்தாது. மாதவிடாய் துவங்கும்போது, உங்கள் உடல் சூடு மற்றும் ரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். பாக்டீரியா வளர்ந்து உங்கள் உடலில் தேவையற்ற தடிப்பு, அரிப்பு, தோல் எரிச்சல், தொற்று ஆகியவற்றை ஏற்படுத்தும்.
உங்கள் பெண்ணுறுப்பை நன்றாக அலசுங்கள்
மாதவிடாய் காலத்தில் நீங்கள் உபயோகிக்கும் கப், நாப்கின் மற்றும் டாம்பான்களை அகற்றியதும் நன்றாக அந்த இடத்தை கழுவுங்கள். இல்லாவிட்டால் பாக்டீரியா தொற்று ஏற்படும். சூடான நீரில் பெண்ணுறுப்பை கழுவுங்கள், பின்னர் உங்கள் பெண்ணுறுப்பே அதை சுத்தம் செய்துகொள்ளும்.
ஏதேனும் ஒரு முறையை பின்பற்றுங்கள்
திடீரென ஏற்படும் உதிரப்போக்கின்போது நீங்கள் ஏதேனும் ஒரு முறையை மட்டுமே பின்பற்றுங்கள். ஏனெனில் சிலர் மூன்றையும் ஒவ்வொன்றாக முயற்சிப்பார்கள் அல்லது இரண்டு நாப்கீன்கள் வைப்பார்கள். அவ்வாறு வைக்கும்போது, அதிக உதிரப்போக்கால், ஆபத்தான பாக்டீரியாக்கள் உருவாகும்.
எனவே ஒன்றை மட்டும் வைதுதுக்கொண்டு அவ்வப்போது மாற்றிக்கொண்டேயிருங்கள். இந்த டிப்ஸ்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கிக்கொள்ளாதீர்கள்.
0 Comments:
Post a Comment