நம்மில் பலருக்கு மிகவும் பிடித்தமான பருவம் க்காலம். தேநீர் அருந்தியவரே மழையை பார்த்து ரசிப்பதில் இருக்கும் சுகம் தனி தான். மழைக்காலம் நமக்கு ஆனந்தத்தை அள்ளி தந்தாலும், அதில் ஒரு சில ஆபத்துகளும் நிறைந்துள்ளது. மழைக்காலத்தில் நாம் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே சரியான உணவுகளுடன், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நமது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் வலுவான எலும்புகளுக்கு கால்சியம் நிறைந்த உணவை சாப்பிடுவது மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தில் கால்சியம் என்ற அத்தியாவசியமான தாது முக்கிய பங்கு வகிக்கிறது.
எலும்புகளின் வளர்ச்சி, சேதமடைந்த எலும்புகளை குணப்படுத்துதல், எலும்புகளுக்கு வலு சேர்த்தல் மற்றும் எளிதில் எலும்பு முறியாமல் கவனித்துக் கொள்ளுதல் போன்ற பல பணிகளை கால்சியம் செய்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கால்சியம் எந்தெந்த உணவுகளை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதனை உங்கள் மழைக்கால டயட்டில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் : பாலில் அதிக அளவு கால்சியம் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். கால்சியம் தவிர பாலில் வைட்டமின் D மற்றும் புரோட்டீன் போன்ற கால்சியம் உறுஞ்சுவதற்கு உதவி புரியக்கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. பால், தயிர், சீஸ் மற்றும் பிற பால் சார்ந்த பொருட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.
பச்சை இலை காய்கறிகள் : கீரை, கேல், ப்ரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளில் ஏராளமான கால்சியம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இவற்றில் எலும்பு உருவாக்கம் மற்றும் குணப்படுத்துவதற்கு அவசியமான வைட்டமின் K சத்தும் காணப்படுகிறது.
சால்மன் மீன் : கொழுப்பு நிறைந்த சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமல்லாமல் நல்ல அளவு கால்சியமும் காணப்படுகிறது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சால்மன் மீனை நம் உணவில் சேர்த்து சாப்பிடுவது வலுவான எலும்புகளை பெற உதவும்.
பாதாம் பருப்பு : பாதாம் பருப்பில் கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களான மெக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் E போன்ற எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களிக்கக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. மாலை நேரத்தில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் சமயத்தில் ஒரு கைப்பிடியளவு பாதம் சாப்பிடுங்கள். இது உங்களுக்கு ஊட்டச்சத்தை அளிப்பதோடு நொறுக்கு தீனி சாப்பிடுவதையும் தவிர்க்க உதவும்.
டோஃபு : சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு கால்சியத்தின் சிறந்த ஆதாரம். வெஜிடேரியன் அல்லது சைவ உணவு பிரியவர்களுக்கு டோஃபு அற்புதமான கால்சியம் சத்தின் மூலமாக செயல்படுகிறது.
எள் விதைகள் : எள் விதைகளில் கால்சியம் மட்டுமல்லாமல் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற எலும்பு ஆரோக்கியத்தை ஊக்குவிக்க கூடிய பிற தாதுக்களும் காணப்படுகிறது. ஆகவே அன்றாட உணவில் சிறிதளவு எள் சேர்த்து சாப்பிடுவது எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
ஆரஞ்சு பழம் : ஆரஞ்சு பழம் வைட்டமின் C -இன் ஆதாரம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இப்பழத்தில் கால்சியம் சத்தும் ஏராளமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் எழும்பு ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமாக கருதப்படும் பொட்டாசியம் சத்தும் ஆரஞ்சு பழத்தில் காணப்படுகிறது.
மத்தி மீன் : இந்த சிறிய எண்ணெய் மீனில் கால்சியம் வைட்டமின் D மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது எலும்பு ஆரோக்கியத்திற்கு பெரிய அளவில் உதவுகிறது.
கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் அவசியமாக கருதப்படுகிறது. தினமும் உடற்பயிற்சி செய்வது, குறிப்பாக மிதமான நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் போன்றவை செய்வது எலும்பு அடர்த்தியை மேம்படுத்தி, அதனை வலுப்பெறச் செய்யும்.
மேலும் சூரிய வெளிச்சத்தில் அவ்வப்போது தினமும் நமது உடலை வெளிப்படுத்துவது உடலில் வைட்டமின் D ஊட்டச்சத்தை பெற உதவும். கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் D உதவுகிறது. போதுமான சூரிய வெளிச்சம் இல்லாத சமயத்தில் வைட்டமின் D சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதையும் ஒருவர் கருத்தில் கொள்ளலாம். ஆனால் எந்த ஒரு உணவு அல்லது மருந்தை சாப்பிடும் முன்பு மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.
No comments:
Post a Comment