1066 சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்கள் - எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லை : உடனே அப்ளை பண்ணுங்க - Agri Info

Adding Green to your Life

July 13, 2023

1066 சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்கள் - எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லை : உடனே அப்ளை பண்ணுங்க

 தமிழ்நாடு மருத்துவ பணிகளில் அடங்கிய சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ( Medical Service Recruitment Board - MRB) வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன.

பதவியின் பெயர்: சுகாதார ஆய்வாளர் (Health Inspector Grade-II)

காலியிடங்கள் எண்ணிக்கை:  1,066

கல்வித் தகுதி : உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தைக் கொண்டு 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10ம் வகுப்பில் தமிழை பாடமாகக் கொண்டு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையால் வழங்கப்பட்ட இரண்டு வருட  Health Worker (Male) course / Health Inspector/ Sanitary Inspector சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இந்த பதவிக்கு ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். (Pay Matrix Level-11)

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.07.2023 அன்று 18-32க்குள் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இடஒதுக்கீடு விதிமுறைகளின் படி,  அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :  இந்த பதவிக்கு எவ்வித எழுத்துத் தேர்வும் கிடையாது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு,    சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.  பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%- க்கும், 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%- க்கும் கணக்கிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.600 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், அருந்ததியர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.300 ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

 இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ - என்ற அங்கீகரிக்கப்பட்ட வலைதள முகவரியில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வு குறித்த மேற்படி விவரங்களை தெரிந்து கொள்ள இந்தஇணைப்பைக் கிளிக் செய்யலாம்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment