திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 21ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது கல்வி சான்று உள்ளிட்ட அனைத்து தகுதி சான்றுகளுடன் நேரில் வரவேண்டும். இதில் பணி நியமனம் பெற்றாலும் அரசு வேலைக்கான பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது.
வேலை தேடுபவர்களும், வேலை அளிக்க விரும்பும் தனியார் நிறுவனங்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களை நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ் டெலிகிராம் சேனலில் இணைந்து அறிந்து கொள்ளலாம். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அதற்கான பாடகுறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
here for latest employment news
No comments:
Post a Comment