இந்தியா முழுவதும் சமீபகாலமாக காய்கறி விலை உயர்ந்து வருவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தக்காளி விலை உயர்வைத் தொடர்ந்து, தற்போது இஞ்சியின் விலை உயர்ந்து வருகிறது. செரிமான பிரச்சனை, உடல் வலி, உடல் நச்சுத்தன்மை போன்றவற்றை போக்குவதில் இஞ்சியின் பங்கு அதிகம் உள்ளது. இந்நிலையில் இஞ்சியை நீண்ட நாள் எப்படி பாதுகாத்து பயன்படுத்துவது என்ற சந்தேகம் எழும். அதற்கான டிப்ஸ் சொல்கிறோம்.
காகிதம்/ டிஷ்யூ : இஞ்சியை சேமிப்பதற்கான மிகவும் பிரபலமான முறைகளில் இதுவும் ஒன்றாகும் . முதலில் இஞ்சியை நன்றாகக் கழுவி உலர வைத்து, பேப்பர் டவலில் போர்த்தி காற்றுப் புகாத பெட்டியில் வைத்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஈரப்பதம் அல்லது காற்றைத் தவிர்க்க பிரீஸிரில் வைத்து பயன்படுத்தலாம்.
வினிகர்: ஒரு டப்பாவில் வினிகர் ஊற்றி அதில்பிரெஷான இஞ்சியை தோலுரித்து, துண்டுகளாக வெட்டி போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும். வினிகர் இல்லாதவர்கள் எலுமிச்சை சாறு வைத்தும் பயன்படுத்தலாம். இந்த செயல்முறை பாக்டீரியா, கிருமிகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிக்க உதவுகிறது, இஞ்சியை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கிறது.
இஞ்சி பேஸ்ட்:வீட்டிலேயே இஞ்சி பேஸ்ட்டை தயார் செய்து, அதை ஃப்ரீசரில் வைத்து நீண்ட நாட்களுக்கு சேமிக்கவும். இஞ்சியை சுத்தம் செய்து தோலுரித்து, சிறிது உப்பு சேர்த்து பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். சுவையை அப்படியே வைத்திருக்க, பேஸ்ட்டை காற்று புகாத டப்பாவில் வைத்து சேமிக்கவும்.
இஞ்சி பொடி: இஞ்சியை சேமிப்பதற்கான மற்றொரு வழி நீரிழப்பு. இஞ்சியை தோலுரித்து, அதிகப்படியான தண்ணீரை ஒரு காகித துண்டுடை வைத்து துடைத்து உலர்த்தவும். பின்னர், உலர்ந்த இஞ்சி பொடியை தயார் செய்யவும். இதைஉங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தலாம்.
இஞ்சி தோல்: நம் கையில் இருக்கும் குறைந்த அளவு இஞ்சியை முடிந்தவரை அதிகம் பயன்படுத்த, அதன் தோலையும் பயன்படுத்தலாம். தேநீர், சோடா மற்றும் பிற பானங்களில் சேர்க்க தோல்களை சுத்தம் செய்து, உலர்த்தி, உலர்த்தி பயன்படுத்தலாம். இஞ்சியை போலவே இஞ்சி தோலையும் பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம்.
0 Comments:
Post a Comment