Search

ரூ.6000 ஊக்கத்தொகையுடன் பெண்களுக்கு மிதியடிகள் தயாரிக்கும் பயற்சி.. எங்கே தெரியுமா?

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தென்னை நார் வாரியத்தின் உதவியுடன் கிராமப்புற பெண்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. உன்னத் பாரத் அபியான் (UNNAT BHARAT ABHIYAN)எனும் மத்திய அரசின் கிராமப்புறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த பயிற்சியானது வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு தற்போது இப்ப பயிற்சியானது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக தென்னை நார் பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் இப்ப பயிற்சியின் மூலம் மிதியடிகள் (FLOOR MAT) தயாரிப்பு பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

தென்னை நாரிலிருந்து மிதியடிகள் தயாரிப்பதற்கான இப்பயிற்சி இரண்டு மாதங்கள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி காலத்தில் பயிற்சி பெறும் பெண்களுக்கு ஊக்கத் தொகையாக மொத்தம் 6000 ரூபாய் தென்னை நார் வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களான நீலக்குடி, நாகக்குடி, கருநாகநல்லூர், தியாகராஜபுரம், சாகரமங்கலம், பண்ணைவளகம், செங்கமேடு, ஆதமங்கலம், எட்டியலூர் உள்ளிட்ட ஒன்பது கிராமங்களை இருந்து தற்போது பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதுவரையில் 9 குழுக்களாக பயிற்சிகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது 10 வாது குழுவிற்கு தற்போது பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு 150 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையில் மதிப்பிலான மிதியடிகள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.கிராமப்புறத்தில் உள்ள பெண்கள் பயிற்சிகளை பெற்று தொழில் வளர்ச்சியில் மேம்பட வேண்டும் என்பதே இத்த உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் நோக்கமாகும்.

here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

 

0 Comments:

Post a Comment