Search

தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 7 அயோடின் நிறைந்த உணவுகள்..!


 கழுத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி, வளர்சிதை மாற்றம் , தூக்க முறைகள், எடை மேலாண்மை மற்றும் உணர்ச்சி நல்வாழ்வு போன்ற அத்தியாவசிய உடல் செயல்பாடுகளை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.   இந்த உறுப்பில் ஏற்படும் கோளாறு தைராய்டு நோய்க்கு வித்திடுகிறது.

சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த நிலை இதயம், மூளை, கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் தோல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் தீங்கு விளைவிக்கும்.  ட்ரையோடோதைரோனைன் (T3) மற்றும் தைராக்ஸின் (T4), ஹாரோன்கள் உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. ஹார்மோன் உற்பத்தியில் ஏற்றத்தாழ்வுகள் தைராய்டு கோளாறுகளின் அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.

தைராய்டு சுரப்பி நமது உணவில் இருந்து ஐயோடினை உறிஞ்சி ஹார்மோன்களை உற்பத்தி செய்ய பயன்படுத்துகிறது.  மனிதரின் உடலில் தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை சரியாக வைத்திருக்க  தினமும் சுமார் 150 மைக்ரோகிராம் ஐயோடின் தேவைப்படுகிறது. ஐயோடின் என்றதும் உப்பில்  மட்டும் தான் உள்ளது என்று நினைத்துவிட வேண்டாம். ஐயோடின் நிறைந்துள்ள உணவு பொருட்களை இப்போது உங்களுக்கு சொல்கிறோம்.

கடற்பாசி :  கெல்ப், நோரி மற்றும் கொம்பு போன்ற கடல் காய்கறிகள் ஐயோடினின்பெரிய ஆதாரங்களாகும். கெல்ப் பாந்தோதெனிக் அமிலம் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது தைராய்டு சமநிலையின்மையுடன் தொடர்புடைய கவலை மற்றும் மனச்சோர்வை நிர்வகிப்பதற்கு நன்மை பயக்கும்.

சீஸ்:  சீஸ்-பாலாடைக்கட்டி உள்ளிட்ட பால் பொருட்கள் , கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஐயோடினையும் கொண்டிருக்கின்றன. செடார் மற்றும் மொஸரெல்லா சீஸ் இதில் அதிகப்படியான ஐயோடின் உள்ளது

பால்:  ஒவ்வொரு 250 மில்லி பாலிலும் தோராயமாக 150 மைக்ரோகிராம் ஐயோடின் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பசுக்கள், ஐயோடின் நிறைந்த தீவனம் மற்றும் புல் ஆகியவற்றைக் கொடுக்கும்போது, ஐயோடினை அவற்றின் பாலுக்கு மாற்றும்.

டுனா:  ஒரு 6-அவுன்ஸ் டுனா மீன் சுமார் 34 மைக்ரோகிராம் ஐயோடினை வழங்குகிறது என்று அமெரிக்க உணவு ஆய்வுகள் கூறுகின்றன. உங்கள் உணவில் ஐயோடின் சேர்த்துக்கொள்ள இது மற்றொரு சிறந்த கடல் உணவுத் தேர்வாகும்.

மத்தி:  குறைந்த கலோரிகள் மற்றும் ஐயோடின் நிறைந்த மத்தி, நன்மை பயக்கும் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளையும் வழங்குகிறது. அவற்றை வேகவைத்தோ அல்லது காய்கறிகளுடன் சேர்த்து வறுத்தோ சாப்பிடலாம்.

முட்டை:  முட்டைகள் ஐயோடினின் சிறந்த மூலமாகும், ஒரு பெரிய முட்டை சுமார் 24 மைக்ரோகிராம் ஐயோடின் கொண்டுள்ளது. அதாவது தினசரி தேவை மதிப்பில் 16% வழங்குகிறது. தினசரி உங்கள் உணவு வழக்கத்தில் 1 முட்டை சேர்த்து கொள்வது நல்ல பலனைத்தரும்.

இறால்:  இறால் உள்ளிட்ட கடல் உணவுகள், கடல் நீரிலிருந்து ஐயோடினை உறிஞ்சி,  ஒரு சாதகமான ஐயோடின் நிறைந்த  மாறிவிடும். அதோடு இறால் நன்மை பயக்கும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகளையும் வழங்குகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment