பழங்களை சாப்பிடுவதற்கான விதிமுறைகள் தெரியுமா..? ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ்..! - Agri Info

Adding Green to your Life

July 18, 2023

பழங்களை சாப்பிடுவதற்கான விதிமுறைகள் தெரியுமா..? ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ்..!

 நம் உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் பச்சை காய்கறிகள் மற்றும் வண்ணமயமான பழங்களை சாப்பிட வேண்டியதன் அவசியம் குறித்து சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக மக்களின் நுகர்வு அதிகரித்துள்ளது.

பழங்களை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதய நோய்க்கான ஆபத்துகள் குறைகின்றன. இது மட்டுமல்லாமல், புற்றுநோயை உருவாக்குகின்ற செல்களை மட்டுப்படுத்தும். பழங்களின் தேவை குறித்து அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு, அதை எவ்வளவு சாப்பிட வேண்டும், எதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்ற விவரங்கள் பலருக்கும் தெரிவதில்லை.

இந்த நிலையில், பழங்களை எப்படி சாப்பிட வேண்டும், எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது என்பது குறித்து ஆயுர்வேத மருத்துவர் டிம்பிள் ஜங்க்டா விளக்கம் அளித்துள்ளார். அதை இப்போது பார்க்கலாம்.

துவர்ப்பு சுவையுள்ள பழங்கள் : ஆப்பிள், பேரிக்காய், முழுமையாக பழுக்காத வாழைப்பழம், கிரேன்பெர்ரி, மாதுளை, பெர்ரி, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவையெல்லாம் துவர்ப்பு தன்மை கொண்ட பழங்களாகும். இவை வறண்டு காணப்படும். ஆனால் குளிர்ச்சி தரக் கூடியவை. இதுபோன்ற சுவையுள்ள பழங்கள் நம் திசுக்களை வலுப்படுத்தும், வியர்வையை குறைக்கும் மற்றும் உஷ்ணத்தை மட்டுப்படுத்தும்.

புளிப்பு சுவையுள்ள பழங்கள் : எலுமிச்சை, செர்ரி தக்காளி, ஆரஞ்சு, திராட்சை, பிளம்ஸ், கிவி போன்றவை புளிப்பு சுவை கொண்ட பழங்கள் ஆகும். இவை வாயில் ஈரப்பதத்தை அதிகப்படுத்தி, எச்சில் சுரப்பை மேம்படுத்தும். நம் உடலில் பைல் திரவ உற்பத்தியை மேம்படுத்தும் மற்றும் திசுக்களை சுத்தம் செய்ய உதவும்.

இனிப்பான பழங்கள் : மாம்பழம், வாழைப்பழம், பப்பாளி, மஸ்க் மெலான், அவகோடோ, அன்னாசி போன்றவை இனிப்பு சுவை கொண்ட பழங்கள் ஆகும். இவை நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். எலும்புகள், தசைகள், பல், நகங்கள் மற்றும் முடி ஆகியவற்றை பலப்படுத்த இனிப்பு சுவை உறுதுணையாக அமையும் என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது.

பழங்களுக்கான கட்டுப்பாடுகள் : 

பழங்களை தனியாக சாப்பிட வேண்டும். பழங்களுடன் பருப்புகள், காய்கறிகள், பால், தயிர், இறைச்சி போன்றவற்றை கலக்க கூடாது. ஏனென்றால் அவை செரிமானம் ஆகாமல் கழிவுகளாக மாறிவிடும். பழங்கள் வெகுவிரைவாக செரிமானம் ஆகிவிடும். வயிற்றில் ஒரு மணி நேரம், சிறுகுடலில் ஒரு மணி நேரம், பெருங்குடலில் ஒரு மணி நேரம் என்பதுதான் பழங்களின் செரிமான நேரம் ஆகும்.
சூரிய அஸ்த்தமனத்திற்குப் பிறகு பழங்களை சாப்பிடக் கூடாது. தூங்குவதற்கு முன்பாக பழங்களை சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. இது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். உங்களை சுறுசுறுப்பாக்கி தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

வெவ்வேறு இன வகையுடன் பழங்களை சேர்க்க கூடாது. உதாரணத்திற்கு ஆப்பிளையும், மாம்பழத்தையும் ஒன்றாக சாப்பிடக் கூடாது. இது செரிமானக் கோளாறை உருவாக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment