காலை மற்றும் இரவு உணவை போலவே மத்திய நேரத்தில் உணவு சாப்பிடுவது மிக முக்கியமானது. பலரும் வேலைப்பளு காரணமாக மதிய உணவு சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறார்கள் இல்லை என்றால் மிக தாமதமாக சாப்பிடுகிறார்கள்.
இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, சரியான நேரத்தில் தவறாமல் மதிய உணவு சாப்பிட வேண்டும். மதிய நேரத்தில் உணவு சாப்பிடுவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும் மற்றும் எதை சாப்பிட கூடாது என்பதும் முக்கியம். இங்கே நாம் மதிய உணவின் போது எவற்றையெல்லாம் சாப்பிட கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.
முந்தைய நாள் இரவில் மீந்த உணவுகள்: முந்தைய நாள் இரவில் தயாரித்த உங்களுக்கு பிடித்த பிரியாணி போன்ற உணவுகளை அடுத்த நாள் மதியம் சாப்பிட நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். ஆனால் முந்தைய தினம் தயாரிக்கப்பட்ட அதிக காரம் சேர்க்கப்பட்ட உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடுவது உங்கள் வயிற்றை மிக மோசமாக பாதிக்க கூடும்
எண்ணெயில் பொரித்த உணவுகள்: மதிய உணவு என்பது ஒரு நாளின் காலை மற்றும் இரவு நேரத்தை விட அதிகம் சாப்பிட கூடிய நேரமாக இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் மதிய நேரத்தில் தான் ஹெவியாக சாப்பிடுவோம். எனவே மதிய நேரத்தில் ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் டீப் ஃப்ரை செய்யப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
சாலட்ஸ்கள் மற்றும் சூப்ஸ்கள்: பலர் மதிய உணவிற்கு சூப்கள் மற்றும் சாலட்ஸ்களை சாப்பிடுவதை காணலாம். ஆனால் இதுபோன்ற குறைந்த கலோரி அடங்கிய உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடுவது, இரவு வரை உங்கள் பசியை கட்டுக்குள் வைக்க உதவாது. இரவு உணவிற்கு இடையிலேயே மேம்படும் ஹெவியாக சாப்பிட வேண்டும் என்ற ஆவலை தூண்ட கூடும்.
பழங்கள்: மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த பழக்கம் உங்கள் செரிமானத்தை கணிசமாக பாதிக்க கூடும்.
சாண்ட்விச்கள் மற்றும் முன் ப்ரீ-மேட் ஃபுட்ஸ் : மதிய நேரத்தில் ஆரோக்கியமாக சாப்பிடுவது அவசியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே அந்த நேரத்தில் சாண்ட்விச்கள் மற்றும் முன்பே தயாரித்து வைக்கப்படும் Pre-made உணவுகளை சார்ந்திருப்பது மிக மோசமான யோசனையாக இருக்கும்.
பாஸ்தா / பீட்சா: மதிய நேரத்தில் பாஸ்தா அல்லது சில பீஸ்கள் பீட்சா சாப்பிடுவது உங்கள் பசியை குறைத்து திருப்தியுணர்வை தரும். ஆனால் இது போன்ற உணவுகளை மதியம் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு தேவையான சரியான ஊட்டச்சத்து கிடைக்காது.
ஸ்மூத்தீஸ், ஜூஸ்கள், ஷேக்ஸ்: ஸ்மூத்தீஸ்கள், ஜூஸ்கள், ஷேக்ஸ் உள்ளிட்ட பானங்கள் நமது வயிற்றை விரைவாக ஃபுல் செய்து விடும் என்றாலும், மதிய நேரத்தில் நம் உடலுக்கு தேவையான சரியான உணவுகள் இவை அல்ல.
சரியான உணவுகளையோ அல்லது மதிய நேரத்தில் நீங்கள் வழக்கமாக உண்ணும் ஆரோக்கிய உணவுகளை தவிர்க்காதீர்கள்.
மதிய நேரத்தில் எப்போதும் புதிதாக தயாரிக்கப்பட்ட மற்றும் சூடான உணவுகளை சாப்பிட முன்னுரிமை கொடுங்கள்.
No comments:
Post a Comment