மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்பவர்கள் இதையெல்லாம் கட்டாயமாக செய்ய மாட்டார்கள்..! - Agri Info

Adding Green to your Life

July 18, 2023

மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்பவர்கள் இதையெல்லாம் கட்டாயமாக செய்ய மாட்டார்கள்..!

 பொதுவாக மனிதர்களில் ஒற்றுமைகள் வேற்றுமைகள் காணப்பட்டாலும், அடிப்படை பண்புகள், விருப்பு வெறுப்பு ஆகியவற்றில் அதிக வேறுபாடுகள் காணப்படும். அதேபோல ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எவ்வாறு எதிர் கொள்வார் என்பது மிகப்பெரிய அளவில் வேறுபடும். உதாரணமாக, ஒரு சிலர் எல்லாவற்றுக்கும் உணர்ச்சிவசப்படுபவராக இருப்பார்; ஒரு சிலர் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத நபராக இருப்பார். சிலர் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நபராக இருப்பார்.

இதில் குறிப்பாக மற்றவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு நடப்பவர்கள், மற்றவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பவர்கள், ஆறுதல் சொல்பவர்கள், ஆதரவாக இருப்பவர்கள் emotionally available people என்று கூறப்படுகிறார்கள். இவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நபர்கள், பின்வரும் இந்த ஆறு விஷயங்களை கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். இது இவர்களை தற்காத்துக்கொள்ளும் முறையாகவும் கூறப்படுகிறது.

தங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் எவ்வாறு கையாள வேண்டுமென்பதில் இவர்கள் மிகத் தெளிவாக இருப்பார்கள். ஒரு உறவில் அல்லது தன்னுடைய பாட்னாரிடமும் என்ன தேவை என்பதை என்பதை பற்றி எந்த குழப்பமும் இருக்காது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் அல்லது கடினமான சூழலால் பாதிக்கப்பட்டால் கூட அதிலிருந்து ஓட மாட்டார்கள். எந்த சூழலாக இருந்தாலும் அதை துணிச்சலாக எதிர்கொள்வார்கள். மேலும், உறவை பொறுத்தவரை அதை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு எதை தவிர்க்க வேண்டும் என்பது இவர்களுக்கு கட்டாயமாக தெரியும்.

பார்ட்னரிடம் Vulnerable ஆக இருப்பதை தவிர்ப்பது : ஒரு உறவு வலுப்படவும், அழகாக வளரவும், நீடிக்கவும், ஒருவருக்கொருவர் vulnerable ஆக இருப்பதில் தவறே இல்லை. அதாவது, எமோஷனல் நபர்கள் அழகான உறவை வளர்க்க, தன் இணையால் பாதிக்கப்படலாம் என்பதை புரிந்து கொள்கிறார்கள். உணர்ச்சிபூர்வமான ஆபத்துகளை இவர்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். சில நேரங்களில் காயப்படுவோம் அல்லது பெரிய வருத்தம் ஏற்படும் என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல், இவர்கள் ரிஸ்க் எடுத்து மனதில் இருப்பதை, எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த தயங்குவதே இல்லை.

உறவுகளில் மாற்றி மாற்றி கேம் ஆடுவது : எந்த உறவாக இருந்தாலுமே நேர்மையாக இருப்பதும் வெளிப்படையான உரையாடலும் மிக மிக முக்கியம். எமோஷனல் நபர்கள் தங்கள் பார்ட்னரிடம் எந்த விதமான கேமையும் விளையாட மாட்டார்கள். மாற்றி மாற்றி பேசுவது ஒருவரை அவருக்கு தெரியாமலேயே மேனிபுலேட் செய்வது, விசுவாசம் இல்லாமல், நேர்மை இல்லாமல் நடந்து கொள்வது உள்ளிட்ட எந்தவிதமான நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் இது போல யார் செய்தாலுமே அவர்களிடமிருந்து முழுக்க முழுக்க விலகியே இருப்பார்கள்.

அவமரியாதையாக பேசுவது : எந்த உறவாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் எந்த அளவுக்கு தொடர்பு கொள்கிறார்கள் எவ்வளவு வெளிப்படையாக பேசுகிறார்கள் என்பது உறவை வலுப்படுத்தும். குறிப்பாக கணவன் மனைவி உறவுக்குள் கம்யூனிக்கேஷன் மிக மிக முக்கியம். அதிலும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர மரியாதையுடன் பேச வேண்டும் என்பதை பின்பற்றுவார்கள். மரியாதை இல்லாமல் பேசுவது என்பது உறவை தீவிரமாக பாதிக்கும். தேவையற்ற, அநாகரிகமான சொற்கள், மட்டம் தட்டிப் பேசுவது இவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

கடினமான உரையாடல்களில் இருந்து விலகுவது : இமோஷனல் நபர்கள் ஒரு சூழல் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அதிலிருக்கும் உரையாடல் கடுமையாக இருந்தாலும் அதிலிருந்து விலகி செல்லமாட்டார்கள். அதை தைரியமாக எதிர்கொண்டு இருக்கும் பிரச்சனைகளை புரிந்துகொண்டு சுமூகமாக தீர்க்கத்தான் முயற்சி செய்வார்கள். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் அல்லது அதிலிருந்து எப்படியாவது எஸ்கேப் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கவே இருக்காது.

எமோஷனல் நெருக்கத்தை தவிர்ப்பது : கணவன் மனைவிக்குள் நெருக்கம் என்பது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். இதைத்தான் எமோஷனல் இன்டிமசி என்று கூறுவார்கள். எமோஷனல் நபர்கள் தங்கள் மனம் விரும்புவதை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். எனவே பாட்னருடன் இமோஷனல் இன்டிமசியை வளர்த்துக்கொள்வார்கள். உறவுகளை பிணைக்க எமோஷனல் நெருக்கம் மிக மிக இன்றையமையாதது. இத்தகைய நபர்கள் பெரும்பாலும், மன முதிர்ச்சியுடன் இருப்பார்கள். உணர்ச்சிபூர்வமாக உறவில் தங்களை இணைத்து கொள்ள விரும்பாதவர்கள் நபர்களிடம் இருந்து இவர்கள் விலகியே இருப்பார்கள். என்னென்றால் உணர்வுகளைப் பற்றி பெரிதாக கவலை படாத நபர்களிடம் ஏற்படும் உறவு நீண்ட காலம் நிலைக்காது, உறவை வளர்க்க முடியாது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment