பலருக்கும் முடி உதிர்வு பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க பலரும் பலவித ஆயில்களை பயன்படுத்தி பார்க்கின்றனர். ஆனாலும் முடி உதிர்வு நின்றபாடில்லை என்று புலம்புவதை கேட்க முடிகிறது. நீங்களும் இவர்களில் ஒருவரா.! உங்கள் தலைமுடி ஏன் உதிர்கிறது என எப்போதாவது யோசித்ததுண்டா.. முடி உதிர்வுக்கான காரணங்களில் மன அழுத்தம், வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் கோளாறுகள், மாசுபாடு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் மோசமான உணவுமுறையும் அடங்கும்.
முடி உதிர்தல் சிக்கலுக்கு உங்களின் உணவுமுறை முக்கிய காரணமாக இல்லாவிட்டாலும், நல்ல உணவு முறை மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.நேஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசின் இதழிலில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, முடி அமைப்பு மற்றும் முடி வளர்ச்சி இரண்டையும் ஊட்டச்சத்து குறைபாடு பாதிக்கலாம். முடி வளர்ச்சியானது கலோரி மற்றும் புரத சத்து குறைபாடு மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணிகளால் பாதிக்கப்படலாம். தவிர திடீர் எடை இழப்பு அல்லது புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்து எடுத்து கொள்வதில் குறைபாடு போன்றவை பெரும்பாலும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது.முடி உதிர்வை எப்படி நிறுத்துவது..?
முடி உதிர்வு சிக்கலை சரி செய்வதில் ஆரோக்கியமான முடி பராமரிப்பு முறையை தொடர்ந்து பின்பற்றுவதைத் தவிர, நல்ல ஆரோக்கியமான உணவுகளை டயட்டில் எப்போதும் சேர்ப்பதும் உதவுகிறது. ஏனென்றால் உங்கள் மயிர்க்கால்கள் வலுவாக இருக்க நிறைய ஊட்டச்சத்துகளும் தேவை. இவற்றை உணவில் இருந்து நாம் பெற முடியும்.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகள் எவை..? நல்ல அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கும் எந்த உணவும் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று குறிப்பிடும் பிரபல டயட்டீஷியன் ஷீனம் கே மல்ஹோத்ரா, நம் தலைமுடிக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றை வழங்கும் உணவுகள் பற்றி தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார். இவர் தனது லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட்டில் முடி உதிர்வை தடுக்க நம் டயட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகளை பகிர்ந்துள்ளார். முடி உதிர்வை சமாளிப்பதற்கான நிபுணர் ஷீனமின் சில டயட் ஹேக்ஸ் இங்கே....
ப்ரோட்டீன்: கூந்தல் ஆரோக்கியத்திற்கு ப்ரோட்டீன் மிக முக்கியமான ஊட்டச்சத்து. மேலும் நமது முடியானது என்பதை ப்ரோட்டீனால் ஆனது. எனவே உங்கள் கூந்தலை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக மாற்ற உங்கள் டயட்டில் போதுமான அளவு ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை சேர்ப்பது முக்கியமானது. குறைந்த அளவு ப்ரோட்டீன் நுகர்வும் கூட முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கும் என்பதால் கோழி, மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ்கள் உள்ளிட்டவற்றை நிறைய சாப்பிட பரிந்துரைக்கிறார்.
இரும்புச்சத்து : கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான மினரல்ஸ் என்று வரும் போது நம்முடைய மயிர்க்கால்களுக்கு இரும்பு சத்து அதிகம் தேவைப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு முடி வளர்ச்சி சுழற்சியை (Hair growth cycle) பாதிக்கிறது மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுப்பதாக நிபுணர் ஷீனம் குறிப்பிட்டுள்ளார். அசைவம் சாப்பிடுவோர் என்றால் தங்கள் டயட்டில் சிவப்பு இறைச்சி, கோழி மற்றும் மீன் போன்ற விலங்கு பொருட்கள், சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவோர் என்றால் பருப்பு, கீரை மற்றும் ப்ரோக்கோலி, காலே மற்றும் சாலட் க்ரீன்ஸ் போன்ற பச்சை இலை காய்கறிகளை தங்கள் டயட்டில் சேர்த்து இரும்புச்சத்து நிக்கரை அதிகரிக்கலாம்.
வைட்டமின் சி: இரும்பு சத்தை சிறப்பாக உறிஞ்ச வைட்டமின் சி உதவுகிறது, எனவே வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது கூந்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வைட்டமின் சி ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும், எனவே இது உடலால் உடனடியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியை வைட்டமின் சி தூண்டுகிறது. ப்ளூபெர்ரி, ப்ரோக்கோலி, கொய்யா, கிவி பழங்கள், ஆரஞ்சு, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஸ்வீட் பொட்டேட்டோ உள்ளிட்டவை உங்கள் டயட்டில் சேர்க்க கூடிய வைட்டமின் சி நிறைந்த சில உணவுகள் ஆகும்
ஒமேகா 3 : நம்முடைய தலைமுடிக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கிய கொழுப்புகள் தேவை, ஆனால் இவற்றை நம் உடலால் சொந்தமாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே ஒமேகா 3-யானது உணவின் மூலம் பெறப்பட வேண்டும். நம் உச்சந்தலை மற்றும் முடியை ஹைட்ரேட்டாக வைத்திருக்கும் எண்ணெய்களை Omega-3 வழங்குகின்றன. ஆய்லி மீன், காட் லிவர் ஆயில் மற்றும் அவகேடோ, சீட்ஸ் மற்றும் நட்ஸ் போன்றவரை டயட்டில் சேர்க்கவும்.
ஜிங்க் மற்றும் செலினியம் : இரும்புச்சத்து தவிர ஜிங்க் மற்றும் செலினியம் உள்ளிட்டவை முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவும் முக்கிய மினரல்ஸ் ஆகும். செறிவூட்டப்பட்ட தானியங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் முட்டைகளை டயட்டில் சேர்ப்பதன் மூலம் இந்த மினரல்ஸ்களை நீங்கள் பெறலாம்.
No comments:
Post a Comment