நமது உடல் சோர்வாக இருக்கும் பொழுது அல்லது அலுப்பாகும் பொழுது அல்லது ஓய்வு தேவைப்படும் பொழுது இயற்கையான எதிரொலியாக கொட்டாவி உண்டாகிறது. ஆனால் எந்தவொரு தெளிவான காரணமும் இல்லாமல் அடிக்கடி உங்களுக்கு கொட்டாவி வருகிறது என்றால் அது ஏதேனும் ஒரு நோயின் அறிகுறியாக . அடிக்கடி கொட்டாவி வருவதற்கான ஒரு சில காரணங்கள் என்ன என்பதை இப்பொழுது புரிந்து கொள்வோம்.
1. போதுமான தூக்கம் இல்லாமை மற்றும் சோர்வு: நீண்ட நாட்களாக உங்கள் உடல் சோர்வாக காணப்பட்டாலோ அல்லது உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்கவில்லை என்றாலோ உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. உடலுக்கு தேவையான ஓய்வு கிடைக்காத பொழுது கொட்டாவியை ஏற்படுத்துவதன் மூலமாக ஆக்சிஜன் உள்ளெடுப்பு அதிகரிக்கப்பட்டு, தற்காலிகமாக எச்சரிக்கை உணர்வை அதிகரிக்கிறது. நீங்கள் போதுமான அளவு தூங்கிய பிறகும் அளவுக்கு அதிகமாக உங்களுக்கு கொட்டாவி வருகிறது என்றால், உங்கள் உடலானது சோர்வுடன் போராடி வருகிறது என்று அர்த்தம்.
2. தூக்க கோளாறுகள்: ஒரு சில தூக்க கோளாறுகள் காரணமாக அதிகப்படியான கொட்டாவி ஏற்படலாம். தூக்கத்தில் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் ஸ்லீப் ஆப்னியா இருக்கும் நபர்கள் பகல் நேரத்தில் தூக்க கலக்கத்துடன் காணப்படுவார்கள். மேலும் அடிக்கடி கொட்டாவி விடுவார்கள். கூடுதலாக கட்டுப்படுத்த இயலாத தூக்கத்தை ஏற்படுத்தும் நார்கோலெப்சி என்ற பிரச்சினையினால் அவதிப்பட்டு வரும் நபர்களின் உடல் தன்னை விழிப்பாக வைத்துக் கொள்ள அதிகப்படியான கொட்டாவியை உருவாக்கும்.
3. மருந்துகளின் விளைவுகள்: ஒரு சில மருந்துகளின் பக்க விளைவாக அதிகப்படியான கொட்டாவி ஏற்படலாம். மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய ஆன்டி டிப்ரசன்ட்கள், ஆன்டி சைக்கோடிக்ஸ் மற்றும் சடேடிவ்ஸ் போன்ற மருந்துகளின் விளைவாக அடிக்கடி கொட்டாவி தூண்டப்படும். ஏதேனும் புதிய மருந்து சாப்பிட தொடங்கி இருக்கும் சமயத்தில் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருகிறது என்றால் இது குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுவது அவசியம்.
4. பதட்டம் மற்றும் மன அழுத்தம்: பதட்டம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதன் விளைவாக கொட்டாவி உருவாகலாம். அதிகப்படியான டென்ஷன் ஏற்படும் சமயத்தில், நமது உடல் அதனை சமாளிக்க ஆழமான மூச்சுகள் மற்றும் ஆக்சிஜன் உள்ளெடுப்பை அதிகரிக்க முயற்சி செய்கிறது. மூச்சு சுழற்சியை கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் கொட்டாவி உதவி புரிகிறது. மன அழுத்தம் நிறைந்த சமயத்தில் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருகிறது என்றால், உங்களின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டிய முயற்சிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள்.
5. உடல்நலக் கோளாறுகள்: ஒரு சில நோய்களின் காரணமாகவும் அடிக்கடி கொட்டாவி ஏற்படலாம். மல்டிபிள் ஸ்கிலீரோசிஸ், மைக்ரெய்ன் அல்லது எபிலெப்சி போன்ற நரம்பு கோளாறுகள் இதில் அடங்கும். மேலும் அதிகப்படியான கொட்டாவி இதயம் சார்ந்த நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். உங்களுக்கு எந்த ஒரு காரணமும் இல்லாமல் அடிக்கடி கொட்டாவி வருகிறது என்றால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து அதன் காரணத்தையும், அதற்கான சிகிச்சையும் பெறுவது அவசியம்.
No comments:
Post a Comment