நாம் டிவியில் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது உயரமாக வளர்வதற்கு இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்ற வகையில் விளம்பரங்கள் வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவை உண்மையாகவே உயரமாக வளர உந்து சக்தியாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் நம் உடலின் உயரத்தை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்களை தூண்டுவதற்கு தேவையான சத்துக்கள் உணவுகளிலேயே உள்ளன. அவற்றை எடுத்துக் கொண்டால் நம் உயரம் அதிகரிக்கும்.
பாதாம் பருப்பு: பலவகை ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் அடங்கிய பாதாம் பருப்புகளை எடுத்துக் கொண்டால் குழந்தைகளின் உயரம் அதிகரிக்கும். ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனிசியம் போன்ற சத்துக்கள் இதில் உள்ளன.
சர்க்கரைவள்ளி கிழங்கு : இனிப்பு கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளி கிழங்கு என்று அழைக்கப்படும் இந்த கிழங்குகளில் விட்டமின் ஏ சத்து மிகுதியாக உள்ளது. இது நம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உயரத்தை அதிகரிக்கவும் உறுதுணையாக அமையும்.
முட்டை: குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் வரையில் முட்டையை வாடிக்கையாக கொடுத்து வந்தால் உரிய விட்டமின் டி சத்து கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல் குழந்தைகளின் உயரம் அதிகரிக்கவும் இது வழிவகை செய்யும்.
பீன்ஸ் : நமக்கு அபரிமிதமான புரதச்சத்து கிடைக்க பீன்ஸ் விதைகளை எடுத்துக் கொள்கிறோம். இது நம் குழந்தைகளின் வளர்ச்சியை தூண்டக்கூடிய இன்சுலின் போன்ற ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
தயிர்: இளம் வயதில் தயிரை விரும்பி சாப்பிடாத குழந்தைகள் இருக்க முடியாது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய புரோபயாட்டிக் சத்துக்கள் இதில் உள்ளன. அதேபோல நம் உடல் உயரத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
சிக்கன்: உங்கள் குழந்தைகள் அசைவ விரும்பியாக இருப்பின் நீங்கள் தாராளமாக சிக்கன் கொடுக்கலாம். இதில் விட்டமின் பி2 மற்றும் இதர முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடல் உயரத்தை அதிகரிக்க உதவியாக அமையும்.
பெர்ரி பழங்கள்: அடர்த்தியான கரும் ஊதா நிறங்களை கொண்ட பெர்ரி பழங்களை பார்த்த உடனேயே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம். இது எலும்புகளை பலப்படுத்தும்.
பச்சை இலை காய்கறிகள்: பாலக்கீரை, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற பச்சை இலை கீரைகள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொண்டால் விட்டமின் கே சத்து மிகுதியாக கிடைக்கும். இது நம் எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தக் கூடியவை மற்றும் உயரத்தை அதிகரிக்கும்.
திணை: குயினோவா என்று சொல்லக்கூடிய சீமை திணையை எடுத்துக் கொள்ளலாம். அல்லது நமது பாரம்பரிய திணை வகையை எடுத்துக்கொண்டால் அதைவிட கூடுதலான பலன்கள் கிடைக்கும். உயரம் அதிகரிப்பதுடன் மக்னீசியம், ஃபோலேட், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கிடைக்கும்.
சால்மன் மீன்: சால்மன் மீன்களில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் என்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைவாக உள்ளன. இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
No comments:
Post a Comment