Search

இனிப்பு சாப்பிடும் ஆசையை கட்டுப்படுத்தனுமா..? உங்களுக்கான டிப்ஸ் தான் இது.!

 இனிப்புகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் இனிப்புகள் என்றால் அலாதி பிரியம்தான். இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை மனதில் எழும்போது ஓரிருவாய் சுவைத்து விட்டு நிறுத்திக் கொள்வதில் தவறில்லை தான்.

ஆனால் நம் மனமும், வாயும் அத்தோடு கட்டுப்பட்டு நிற்குமா என்ன! அடுத்தடுத்து இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்ற வகையில் இனிப்புகளை நாம் சுவைத்துக் கொண்டே இருப்போம். ஏனென்றால் நம் நாக்கும், மனமும் இனிப்புகளுக்கு அடிமை என்பதில் மாற்று கருத்து இல்லை.

அதேசமயம் அளவுக்கு அதிகமான இனிப்புகள் என்பது நம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. ஆகவே எதனால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது என்பதனை கண்டறிந்து அதை கட்டுப்படுத்த வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.

ஆனால், நம் மனதில் இனிப்பு காண வேட்கையை தூண்டுவது எது என்ற காரணத்தை துல்லியமாக கணிப்பது மிக சவாலான காரியம். இந்த நிலையில் இனிப்புகளை குறைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்நீத் பாத்தரா விளக்கம் அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இனிப்புகளுக்கான வேட்கை என்பது மிகவும் இயல்பான விஷயம்தான். ஏதோ ஒன்று சிறப்பாக வேண்டும் என்ற நம் சிந்தனையின் விளைவாகவே இனிப்புகளை சாப்பிட தோன்றுகிறது. ஆனால் உண்மையில் உடலுக்கு இனிப்புகள் தேவைப்படாது. அதேசமயம் இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் கட்டுப்பாடு இல்லாமல் போனது என்றால் உங்கள் உணவுப் பழக்கம் குறித்து நீங்கள் அக்கறை செலுத்த வேண்டி இருக்கும்” என்று தெரிவித்தார்.

இனிப்பு சாப்பிடும் ஆசையை கட்டுப்படுத்துவது எப்படி ?

நம் உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்க உதவும் சில தாதுக்கள் குறையும் பட்சத்தில் இனிப்பு சாப்பிட வேண்டிய வேட்கை அதிகரிக்கும்.
ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக இனிப்புகளுக்கான ஆசையை கட்டுப்படுத்த இயலும். ஏனென்றால் உடலுக்கு தேவையான ஆற்றல் கொழுப்புகளிலிருந்து கிடைத்துவிடும்.
புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்த தாவர உணவுகளை மிக அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஜிங்க் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் அளவு உடலில் குறைந்தால் அதுவும் கூட சர்க்கரை தேடலுக்கு காரணமாக அமைந்து விடும்.

நம் உடலுக்கு போதுமான தூக்கம் அவசியமானது. தூக்கம் இல்லை என்றால் உடனடி ஆற்றல் பெறும் நோக்கில் நாம் இனிப்புகளை சாப்பிட தூண்டப்படுவோம். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரையிலான தூக்கம் மிகவும் அவசியமாகும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment