ஸ்கூல் போகும் உங்கள் பிள்ளைகளின் லஞ்ச் பாக்ஸை ஆரோக்கியமானதாக மாற்ற டிப்ஸ்..! - Agri Info

Adding Green to your Life

July 13, 2023

ஸ்கூல் போகும் உங்கள் பிள்ளைகளின் லஞ்ச் பாக்ஸை ஆரோக்கியமானதாக மாற்ற டிப்ஸ்..!

 முன்பெல்லாம் இதயம் சார்ந்த பிரச்சனைகளால் முதியவர்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இளவயதினரும் கூட இந்த அபாயகர பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை காரணமாக சிறு வயது முதலே இதய ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தியே ஆக வேண்டும் என்ற எச்சரிக்கை மணியை நம் சமுகத்திற்கு அடித்துள்ளது.

தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது, படிப்பு என பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த சூழலில் அவர்களின் இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க தேவையான உணவுகளை அவர்களை சாப்பிட வைக்கும் பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. குழந்தைகளிடத்தில் சமச்சீரான டயட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது மிக முக்கியம். ஏனென்றால் இது ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் காலமாக இருக்கிறது. குறிப்பாக தற்காலத்தில் பல குழந்தைகளை பாதிக்கும் பொதுவான ஒரு சிக்கலாக இருக்கிறது உடல் பருமன். இதன் காரணமாக குழந்தைகளுக்கு கொடுத்தனுப்பும் லஞ்ச் பாக்ஸில் கூட சத்துமிக்க உணவுகளை இடம்பெற செய்வது முன்னெப்போதையும் விட முக்கியமானது என்கிறார் ஏஷியன் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டில் பணியாற்றும் பிரபல கார்டியலஜிஸ்ட் டாக்டர் அபிஜித் போர்ஸ்.

குழந்தைகளிடத்தில் பிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ்களை ஊக்குவிப்பது, அவர்கள் சாப்பிடும் உணவுகளில் சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைப்பது, ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவுகளை அவர்களின் டயட்டில் சேர்ப்பது, அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கும் வாழக்கை முறையிலிருந்து அவர்களை விலக்கி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் முக்கிய வழிகளாக இருக்கும் என்றார்.

ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தின் தாக்கம்: சமீபத்திய ஆண்டுகளாக முன்பை விட மலிவான விலையில் மற்றும் அதிக இடங்களில் துரித உணவுகள் கிடைக்கின்றன. துரித உணவுகளின் சுவைக்கு அடிமையாகும் குழந்தைகள் தொடர்ந்து அவற்றை சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் துரித உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சர்க்கரை மற்றும் சோடியம் மிக அதிகமாக சேர்க்கப்படுகிறது. அதே நேரம் இந்த உணவுகளில் பெரும்பாலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எதுவுமே சேர்க்கப்படுவதில்லை.

இது போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது ஆட்டோமேட்டிக்காக உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. தவிர கொலஸ்ட்ரால் லெவல் அதிகரிப்பதோடு எதிர்காலத்தில் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயங்களும் அதிகரிக்கின்றன. எனவே மத்திய உணவு உட்பட ஒரு நாளின் சாப்பிடும் அனைத்து நேரங்களிலும் ஆரோக்கியமான உணவுகள் அடங்கிய டயட்டை பராமரிப்பது குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

ஆரோக்கிய இதயத்திற்கு உதவும் பேலன்ஸ்ட் டயட்: இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சமச்சீர் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. சமச்சீரான டயட்டில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களை வழங்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அடங்கும். பள்ளி செல்லும் உங்கள் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்யும் போது பின்வரும் டிப்ஸ்களை பின்பற்றுங்கள்....

பழங்கள் & காய்கறிகள்: குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்பும் ஸ்னாக்ஸ் & லஞ்ச் பாக்ஸ்களில் வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பது அவசியம். இவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

முழு தானியங்கள்: ரீஃபைன்ட் ஆப்ஷன்களை விட நார்ச்சத்து நிரம்பிய முழு தானிய ரொட்டி, பாஸ்தா மற்றும் தானிய வகைகளை தேர்வு செய்து அவர்களின் டயட்டில் சேர்ப்பது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. தவிர முழு தானியங்கள்ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

லோ-ஃபேட் ப்ரோடீன்ஸ்: பருப்பு வகைகள் மற்றும் டோஃபு போன்ற லீன் அல்லது லோ-ஃபேட் சேச்சுரேட்டட் ப்ரோடீன் நிறைந்த உணவுகளை சேர்க்கலாம்.

ஆரோக்கிய கொழுப்புகள்: அவகேடோ, நட்ஸ், சீட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயில் போன்றவற்றில் ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளன. ஹெல்தி ஃபேட்ஸ் எனப்படும் ஆரோக்கிய கொழுப்புகள் அழற்சியை குறைக்கவும், கொலஸ்ட்ரால் லெவலை மேம்படுத்த உதவி இதய ஆரோக்கியத்திற்கு நன்மைகள் செய்கின்றன.

குறைவான சர்க்கரை: பொதுவாக குழந்தைகளுக்கு சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட ஸ்னாக்ஸ்கள் மற்றும் இனிப்பு வகைகளை கொடுப்பதை படிப்படியாக கட்டுப்படுத்துங்கள். ஃபிரெஷ்ஷான பழங்கள், ஹோம்மேட் கிரானோலா பார்ஸ், யோகர்ட் உள்ளிட்டவற்றை அவர்களின் டயட்டில் சேருங்கள். ஆடட் சுகர்ஸ் மற்றும் அன்ஹெல்தி ஃபேட்ஸ் உள்ளிட்டவற்றை குறைப்பதன் மூலம் உடல் பருமனை தவிர்த்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இவை தவிர உடல் செயல்பாடுகள் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியம். எனவே தினசரி உடற்பயிற்சி, பள்ளி நேரத்திற்கு பிறகு அவுட்டோர் கேம்ஸ் உள்ளிட்ட பிசிக்கல் ஆக்டிவிட்டீஸ்களில் ஈடுபட குழந்தைகளை ஊக்குவிக்கவும். வழக்கமான உடல் செயல்பாடுகள் சரியான எடையை பராமரிக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. தவிர மொபைல், டிவி, லேப்டாப் உள்ளிட்டவற்றை அவர்கள் பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்துங்கள். மொத்தத்தில் சமச்சீரான டயட் மற்றும் உடல் செயல்பாடுகளைசெய்ய ஊக்குவித்தல், சர்க்கரைகள் & கொழுப்பு நுகர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றின் மூலம் உடல் பருமன் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குழந்தைகளிடையே தவிர்க்கலாம் என கூறுகிறார் அபிஜித் போர்ஸ்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment