உலகளவில் மக்களை பாதிக்கும் பொதுவான நோய்களில் ஒன்றாக இருக்கிறது நீரிழிவு நோய். சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் தகவலின்படி, 20 முதல் 79 வயதுக்குட்பட்ட சுமார் 537 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரிழிவு ஒரு நாள்பட்ட நோயாகும், மேலும் இதனை சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள், இதய நோய் போன்ற பல அபாய நிலைமைகள் ஏற்படும். இந்த சூழலில் டைப் 2 நீரிழிவு நோய் இருப்பவர்கள் மற்றும் ப்ரீடயாபட்டீஸ் நிலையில் இருப்பவர்கள் தங்களது ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது அவசியம். இதன் ஒரு பகுதியாக ஒருவர் எந்த உணவுகளை சாப்பிட்டால் தனது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் மற்றும் நீரிழிவு நிலைக்கு மோசமான 10 உணவுகளை பற்றி இங்கே நாம் பார்க்கலாம்.
ஆரஞ்சு ஜூஸ்: 100% ஆரஞ்சு ஜூஸில் பல வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது என்றாலும், இதில் நார்ச்சத்து இல்லை. ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதற்கு நார்ச்சத்து அவசியம். நார்ச்சத்து இல்லாமல் இருப்பதால் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது என்பது ஸ்டார்ச்சை, குளுக்கோஸாக உடைப்பதை மெதுவாக்குகிறது. எனவே ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
காஃபி: நீங்கள் அடிக்கடி காஃபி குடிப்பவரா..! இந்த பானத்தில் உள்ள காஃபின் நம் உடலில் ஒரு ஹார்மோன் ரெஸ்பான்ஸை தூண்டுவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
Quick குக்கிங் ஓட்ஸ்மீல்: இந்த ஓட்ஸ் ஒருபக்கம் எடை இழப்புக்கு உதவும் என்றாலும் மறுபக்கம் இது பதப்படுத்தப்பட்டு இதிலிருக்கும் நார்ச்சத்து அகற்றப்படுகிறது. இது ரத்த சர்க்கரையின் அளவு கணிசமாக அதிகரிக்க வழிவகுக்கும்.
பிரெட்ஸ்: ஒயிட் மற்றும் முழு தானிய பிரெட்கள் ஹை கிளைசெமிக் இன்டெக்ஸை (GI) கொண்டிருக்கின்றன. அதாவது GI அதிகமுள்ள உணவுகள் விரைவாக ரத்த சர்க்கரையை உயர்த்த கூடியவை.
ரெஸ்டாரன்ட்டில் தயாரிக்கப்படும் சூப்கள்: பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ரெஸ்டாரன்ட்டில் தயாரிக்கப்படும் சூப்களில் சுவைக்காக நிறைய Added sugars (சுகர் மற்றும் சிரப்கள்) சேர்க்கப்படும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வழிவகுக்கும்.
திராட்சைகள்: திராட்சை பழங்களில் சர்க்கரை அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் உள்ளது. எனவே இது ரத்த சர்க்கரையின் அளவை சட்டென்று அதிகரிக்க செய்யும்.
எனர்ஜி பார்ஸ்: பேக்கேஜ் செய்யப்பட்ட எனர்ஜி பார்கள் சில சாக்லேட் பார்களைப் போலவே அதிக அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்களை கொண்டிருக்கிறது. எனவே ஆற்றலுக்காக எனர்ஜி பார்களை சாப்பிடுவோர் அது ரத்த சர்க்கரை அளவில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரவுன் அரிசி: வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசி ஆரோக்கியமானதாக இருந்தாலும், இதில் பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. எனவே இது எளிதாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. இதனை அதிகம் எடுத்து கொள்வது ரத்த சர்க்கரையின் அளவில் அதிகரிப்பை ஏற்படுத்தும்.
டயட் சோடா: டயட் சோடாக்களில் உள்ளதை போன்ற ஜீரோ கலோரி செயற்கை ஸ்வீட்னர்ஸ்களை எடுத்து கொள்வது நீண்ட காலத்திற்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மேலும் டயட் சோடா எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி ஆகியவற்றுடன் தொடர்புடையது.
No comments:
Post a Comment