ஆபத்து இல்லாத வருமானத்தைத் தேடுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. அதற்கு தபால் நிலையத்தில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. தொடர் வைப்புத் திட்டமும் இதில் ஒன்று. இதில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் சிறந்த பலனைப் பெறலாம். ஒரு பெரிய தொகை உங்களுக்குக் கிடைக்கும். அது எப்படி என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
தற்போது, தபால் அலுவலக RD திட்டம் 6.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ரூ.100 முதல் பணத்தைச் சேமிக்கலாம். ஜாயிண்ட் அல்லது தனிக் கணக்கை ஓபன் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இத்திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள்.
பின்னர் உங்கள் பணம் மொத்தமாக ஒரே நேரத்தில் உங்களிடம் திருப்பியளிக்கப்படும். அந்தப் பணம் நீங்கள் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்தது. அதனால் அதிக பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்.
உதாரணமாக, நீங்கள் மாதம் ரூ.1000 முதலீடு செய்தால், முதிர்வு நேரத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று பார்க்கலாம். மாதம் ரூ.1000 என்றால் 5 ஆண்டுகளில் ரூ. 60 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும். நீங்கள் ரூ.11,000 வட்டி பெறுவீர்கள். மேலும் 5 ஆண்டுகளுக்கு நீங்கள் அதை நீட்டித்தால், உங்கள் வைப்புத் தொகை ரூ. 1.2 லட்சம் இருக்கும். வட்டியாக 49 ஆயிரம் வரும். அப்போது மொத்தமாக 1.69 லட்சம் வரும்.
5 ஆண்டுகளுக்கு மேலும் நீங்கள் பாலிசியை நீட்டித்தால், நீங்கள் டெபாசிட் செய்யும் தொகை ரூ. 1.8 லட்சம் இருக்கும். அதற்கான வட்டி ரூ.1.24 லட்சம் வரும். அப்போது மொத்தம் ரூ.3 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்தால் ரூ. 2.4 லட்சம் முதலீடு செய்யப்படும். நீங்கள் ரூ.2.5 லட்சம் வட்டி பெறுவீர்கள். அதாவது 20 ஆண்டுகளில் சுமார் ரூ.5 லட்சம் கிடைக்கும். இதனால் நீங்கள் முதலீடு செய்யும் தொகையின் அடிப்படையில் நீங்கள் பெறும் வருமானமும் மாறுபடும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment