சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது
2023-24 நிதியாண்டுக்கான ஒப்பந்த அடிப்படையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மூலம் BC மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வங்கி பணிக்கு எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:
BC Supervisor பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Central Bank of India கல்வித்தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பேங்க் ஆஃப் இந்தியா வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 21 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
சம்பள விவரம்:
விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ. 15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf
Click here for latest employment news
No comments:
Post a Comment