தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியா் தேர்வு வாரிய தேர்வுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: நிகழாண்டு இடைநிலை ஆசிரியா் பணிக்கும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கும் போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் நடத்தவுள்ளது.
இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் இப்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. தொடா்ந்து இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு தயாராகும் இளைஞா்கள் தேர்வின் பெயா், தங்களது பெயா், கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 04362 - 237037, 9499055905 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
Click here for latest employment news
No comments:
Post a Comment