சென்னை பெருநகர போக்குவரத்து குழும வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி நாள்!
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் ஆனது Social Expert, Senior Data Integration, Junior Data Scientist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி என உள்ளது. இந்த அரசு பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.08.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
போக்குவரத்து குழும வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Social Expert, Senior Data Integration, Junior Data Scientist பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- இப்பணியிடங்கள் அனைத்தும் இரண்டு வருட ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
- இந்த பணி குறித்த கூடுதல் விவரங்கள் www.cumta.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10-ஆகஸ்ட்-2023 அன்று அல்லது அதற்கு முன் cumtaoffice@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு, தற்குறிப்பு போர்ட்ஃபோலியோ, கடந்த 3 மாதங்களுக்கான ஊதியச் சீட்டு மற்றும் எதிர்பார்க்கப்படும் சம்பளம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment