Search

ரூ.25,000 உதவித்தொகை.. யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

 தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது.

அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின்படி, யு.பி.எஸ்.சி. குடிமைப்பணிகள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி  பெற்றவர்களுக்கு, ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் தொடக்கமாக, கடந்த 7-ந் தேதி நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2023-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை  திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ரூ.25,000 ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் படி, இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 11 முதல் 22 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்  என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment